tamilnadu

img

தனியாருக்கு தாராளம்... 1ம்பக்கத் தொடர்ச்சி

•    பொதுத்துறை வங்கிகளுக்கு 70,000 கோடி ரூபாய் மூலதனமாக வழங்கப்படும். இது தொழில் துறை முன்னேற்றத்துக்கு கடன் வழங்குவதை மேம்படுத்தும்.

•    நாட்டில் உள்ள ஏராளமான இளைஞர்களே வருங்காலத்தில் இந்தியாவின் வழிகாட்டிகள்.பிரதமர் கவுசல் விகாஷ் யோஜனா (பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம்) திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சிஅளிக்கப்படும்.

•     செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் உள்ளிட்ட துறைகளில் இளைஞர்களின் திறன் மேம்படுத்தப்படும்.

•     நாடு முன்னேற்றம் அடைய பெண்களின் பங்களிப்பு முக்கியம் என்று அரசாங்கம் நினைக்கிறது.  வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் பெண்கள் அங்கம் வகிக்கிறார்கள். கடந்த தசாப்தத்தில் பெண்களின் பங்களிப்பு அளப்பறியது.                                            நாடாளுமன்றத்தில் 78 பெண் எம்பிக்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் வாக்களித்துள்ளனர்.

•     ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குள்ள மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு இருப்பைவிட அதிகமாக பணம் எடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்படும்.

•     பெண்களை தொழில் செய்ய ஊக்குவிக்கும் வகையில், முத்ரா திட்டம் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.

•     விளையாட்டுத்துறையை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘கேலோ இந்தியா திட்டம்’ அடுத்துவரும் ஆண்டுகளில் மேலும் விரிவாக்கப்படும்.

•     கூடுதல் நிதி உருவாக்கப்பட்டு, நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் திட்டங்கள் உருவாக்கப்படும்.

•     தண்ணீர் பற்றாக்குறையில் கவனம் செலுத்தப்படும்.

•     அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் வழங்க ஜல் ஜீவன் திட்டம் கொண்டுவரப்படும்.

•     தண்ணீர் வளங்கள், தண்ணீர் விநியோகம் மழை நீர் சேகரிப்பு, கழிவு நீர் சுத்திகரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

•     2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஊரக குடும்பங்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

•    இந்தியாவின் கல்வியை சர்வதேச தரத்தில் உயர்த்த அரசின் புதிய கல்விக் கொள்கை உதவும்.  இந்தியாவில் பல துறைகளின் ஆய்வை மேம்படுத்தவும், நிதி மேலாண்மை செய்யவும் நேஷனல் ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவப்படும். வெவ்வேறு                          அமைச்சகங்கள் ஆராய்ச்சிக்கு வழங்கும் நிதிகளை இந்த அமைப்பு ஒருங்கிணைக்கும்.

•     வெளிநாட்டு மாணவர்களை இந்தியா வந்து படிக்க ஊக்குவிக்கும் வகையில், ‘இந்தியாவில் படியுங்கள்’ Study in India திட்டம் தொடங்கப்படும்.

•    நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் எனும் புதிய பொதுத்துறை நிறுவனம் மூலம் விண்வெளி சேவைகளை இந்தியா உலகிற்கு சந்தைப்படுத்தும்.

•    அக்டோபர் 2, 2014 முதல் 9.5 கோடி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. 5.6 லட்சத்துக்கும் மேலான கிராமங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்டுள்ளது. 95% நகரங்களில் திறந்த வெளியில் மலம் கழிப்பது ஒழிக்கப்பட்டுள்ளது.

•    வேளாண் துறையில் தொழில் முனைவோர் உருவாவது ஊக்குவிக்கப்படும். வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்தும்.

•    திறன் மேம்பாடு மூலம் கிராமப்புற - வேளாண் துறையில்75,000தொழில் முனைவோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

•    80,250 கோடி ரூபாய் மதிப்பில் 1,25,000 கிலோமீட்டர் நீளமுள்ள கிராமப்புற சாலைகள் மேம்படுத்தப்படும்.

•    மாநிலங்கள் இடையிலான மின் தேவையை பூர்த்தி செய்ய ஒரே தேசம், ஒரே மின்தொகுப்பு திட்டம்.

•    ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறைவாக வா்த்தகம் செய்யும் சிறு, குறு வியாபாரிகளுக்கு பென்ஷன் திட்டம்.

•    ஜி.எஸ்.டி பதிவு பெற்ற சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி அளிக்க ரூ.350 கோடி.

•    ரயில்வே துறையில் பயணிகள், சரக்கு போக்குவரத்தில் தனியார் பங்களிப்பு ஈடுபடுத்தப்படும்.

•    விமானத்துறை, இன்சூரன்ஸ், ஊடகம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை.

•     2022ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடு. 

•     தன்னார்வ நிறுவனங்களை ‘செபி’யின் கீழ் பட்டியலிட நடவடிக்கை எடுக்கப்படும்.

•     உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை

•     நாட்டில் புதிதாக 10 ஆயிரம் வேளான் உற்பத்தி குழுக்கள் உருவாக்கப்படும்

•     ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை

•     சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை ஆண்டுதோறும் நடத்த அரசு திட்டம்

•     மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்

•     2024ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி

•     ஆராய்ச்சி துறையை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும்

•     பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 114 நாட்களுக்குள் வீடுகள் கட்டப்படுகின்றன

•     இதுவரை இந்திய தூதரங்கள் இல்லாத நாடுகளில் தூதரங்கள் திறக்கப்படும்

•     பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு தொடரும். பங்கு விற்பனை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டம்.

•     ஆண்டுக்கு ரூ.2 கோடி முதல் 400 கோடி வரை வரவு-செலவு செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி

•     மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு

•    வங்கிக்கணக்கில் ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2% வரி விதிக்கப்படும்

•     ரூ.50 கோடி வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்படாது

•     ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கு 7% வரி

•     பனை பொருட்களுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து வரிவிலக்கு

•     தங்கம் இறக்குமதி மீதான வரி 10%ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு

•     பார்வையற்றோரும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ள ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 ஆகிய நாணயங்களை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிமுகம் செய்கிறார்.

•     வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் மின்சார வசதி செய்து தரப்படும்.

;