tamilnadu

img

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நீட்டிப்பில் அரசியல் சதி!

புதுதில்லி:
நாடாளுமன்றக் கூட்டத் தொடர், வலுக்கட்டாயமாக நடத்தப்படுவதாகவும், இதன் பின்னணியில் சதி இருப்பதாகவும் சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.17-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் மக்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதனைத் தொட ர்ந்து 2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவே, அதன்மீதான விவா தங்கள் நடந்தன. இத்துடன் கூட்டத்தொடரை முடித்துக் கொள்ளாத மோடி அரசு, அடுத்தடுத்து மசோதாக்களைத் தாக்கல் செய்து, அவற்றின்மீது விவாதம்கூட நடத்தாமல், அவ சர அவசரமாக நிறைவேற்றி வரு கிறது. இதற்காகவே, ஜூலை 26-ஆம் தேதியுடன் முடிவடைய வேண்டிய  கூட்டத்தொடரையும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை மோடி அரசு நீட்டித்துள்ளது. இதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது, சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.“மக்களவை என்பது மாநிலசட்டப்பேரவைகளுக்கு முன்மாதிரி யாக விளங்க வேண்டும். ஆனால்இங்கு, இருக்கைகள் காலியாக உள்ளன. எம்.பி.க்கள் திருமண நிகழ்ச்சிகளுக்கு சென்று விட்டனர். அதையும் மீறி அவையை நடத்துவது ஏன்? இதன் பின்ன ணியில் அரசின் சதி உள்ளதாக பார்க்கிறேன். மக்களின் வரிப்பணம் விரயம் செய்யப்படுகிறது. வலுக்கட்டாயமாக கூட்டத் தொடரை நடத்துவதற்கு நியாயமான காரணம் என்ன?” என்றுமுலாயம் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

;