புதுதில்லி:
இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏஎன்- 32 ரக விமானமொன்று, அருணாசலப் பிரதேசத்திலுள்ள சியாங் மாவட்டப் பகுதியில் விழுந்து உடைந்து நொறுங்கியது. இதில், விமானத்தில் பயணித்த 13 பேரும் பலியாகினர். இதனால் சம்பந்தப்பட்ட வீரர்களின் குடும்பங்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளன. இந்நிலையில், விபத்தில் பலியான வீரர்களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்கூட தெரிவிக்கவில்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.