tamilnadu

img

தில்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும்....   முதல்வர் கெஜ்ரிவால் உறுதி...

தில்லி 
நாட்டின் தலைநகர் மண்டலமான தில்லி அதிக மக்கள் நெருக்கம் கொண்டது. இதனால் அங்கு கொரோனா பரவல் உச்சத்தில் உள்ள நிலையில், இதுவரை 83,077 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,623 பேர் பலியாகியுள்ளனர். ஆறுதல் செய்தியாக 52,607 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தில்லியில் பிளாஸ்மா வங்கி அமைக்க முடிவு செய்துள்ளதாக என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விரிவாக கூறியதாவது," தில்லியில் கல்லீரல் மற்றும் பிலியரி சயின்ஸ் நிறுவனத்தில் பிளாஸ்மா வங்கி அமைக்கப்படும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வங்கியிலிருந்து பிளாஸ்மா வழங்கப்படும். இந்த முறைக்கு சில நாட்களில் உதவி எண்களை அறிவிக்கப்படும். அதன் பின் அடுத்த இரண்டு நாட்களில் பிளாஸ்மா வங்கி செயல்படத் தொடங்கும்"  இவ்வாறு அவர் கூறினார்.

பிளாஸ்மா எனப்படுவது கொரோனாவிலிருந்து மீண்ட நபர்களிடம் ரத்தம் பெறப்பட்டு அந்த ரத்தத்தின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதே பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.  இந்த சிகிச்சை மூலம் தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

;