tamilnadu

img

இனி ரூ. 10 லட்சத்திற்கு மேல் பணம் எடுத்தால் வரி...!

புதுதில்லி:
வங்கி ஏடிஎம்-களில் இருந்து ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் எடுப்போருக்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல, ஏடிஎம்-களில் அதிக தொகையை பரிவர்த்தனை செய்வதற்கு, ஆதார் எண்ணைக் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கறுப்புப் பணப் பதுக்கலை ஒழிக்கும் முயற்சியாகவும், ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை குறைக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாகவும், மத்திய அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
புதிதாக விதிக்கப்பட உள்ள வரி மூலம், தனி நபர்களின் பண பரிவர்த்தனையை எளிதாக கண்காணிக்க முடியும். மேலும் அவர்களின் வருமான வரி தாக்கல் கணக்கின் உண்மை தன்மையை கண்டறியவும் இது பயன்படும் என தில்லி வட்டாரங்கள் கூறியுள்ளன.

இவைதவிர ரூ. 50 ஆயிரத்திற்கு மேல் பணம் டெபாசிட்செய்ய பான் கார்டை கட்டாய மாக்கும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது.இந்த நடவடிக்கைகளால் வருமான வரி தாக்கலின் போது, பரிவர்த்தனை விவரங்களை எளிதாக ஒப்பிட்டுப் பார்க்க முடியும் என்றும் மத்திய அரசு கருதுகிறது. ஜூலை 5-ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.