tamilnadu

img

நிர்பயா வழக்கு: மற்றொரு மனுவும் தள்ளுபடி

புதுதில்லி:
தில்லியில்  2012 ஆம் ஆண்டில் ஓடும் பேருந்தில்மருத்துவ மாணவி நிர்பயா  6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டார்.  இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான பவன் குமார் குப்தா தில்லி உயர்நீதிமன்றத்தில் ஒருபுதிய மனுவை தாக்கல் செய்தான். அதில், கடந்த 2012 ஆம் ஆண்டு போலீசார் தன்னை கைது செய்தபோது தான் சிறுவனாக இருந்ததாகவும், அதனால்தனக்கு சிறார் சட்டப்பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தான்.இந்த  மனு மீதான விசாரணை வியாழனன்றுநடைபெற்றது. அப்போது, புதிய ஆவணங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கும்படி, பவன்குமார் குப்தாவின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 24 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். வழக்கை ஒத்திவைத்ததற்கு, நிர்பயாவின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இதனையடுத்து உடனே தனது உத்தரவை திரும்பப்பெற்ற நீதிபதி, இன்றே வழக்கை விசாரிப்பதாக கூறினார்.அதன்படி வியாழனன்று பிற்பகல் பவன் குப்தாவின் மனு மீது விசாரணை நடத்தப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றவாளி பவன் குமார் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.

;