tamilnadu

img

நிர்பயா வழக்கு: பவன் குப்தா...கருணை மனு நிராகரிப்பு

புதுதில்லி:
தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங்(32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26),அக்ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, தில்லி திகார்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தூக்குத்தண்டனையை தள்ளிப்போடும் வகையில் குற்றவாளிகள் ஒருவர் ஒருவர் பின் ஒருவராக மேல்முறையீடு மற்றும் கருணை மனுக்களை தாக்கல் செய்தனர். இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கில் போட உத்தரவிடக் கோரி, மத்திய அரசு தாக்கல் செய்தமனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து மத்திய அரசுதரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை மார்ச் 5 அன்று நடைபெறுகிறது. இந்நிலையில்  குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா சார்பில் குடியரசுத்தலைவருக்கு கருணை மனு அளிக்கப்பட்டது.  பவன்குப்தாவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த் புதனன்று நிராகரித்தார். இதன்மூலமாக நான்கு குற்றவாளிகளின் கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே,விரைவில் நிர்பயா குற்றவாளிகளின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

;