tamilnadu

img

நிர்பயா வழக்கு: குற்றவாளி முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு

புதுதில்லி,ஜன.16- நிர்பயா வழக்கின் குற்றவாளி கள் 4 பேரில் ஒருவரான முகேஷ் சிங்கின் கருணை மனுவை தில்லி ஆளுநர் நிராகரித்தார். தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா என் பவர் 6 பேர் கொண்ட கும்ப லால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தூக்குத் தண்ட னை விதிக்கப்பட்ட குற்றவாளி கள் 4 பேரையும் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கில் போடு வதற்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதைத்தொடர்ந்து திகார் சிறையில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து வினய்குமார் சர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மறுசீராய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது இந்நிலையில்  தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி 4 குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் என்பவர் கருணை மனு அனுப்பினார்.  இந்த கருணை மனுவை தில்லி துணை நிலை ஆளுநர்  நிராகரித்து, அதனை உள்துறை  அமைச்சகத்துக்கு அனுப்பி யுள்ளார்.

;