tamilnadu

தேசிய கல்விக் கொள்கை: அக்.31 வரை கருத்து தெரிவிக்கலாம் ...

புதுதில்லி:
அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு யுஜிசி செயலர் ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “தேசிய கல்விக் கொள்கை குறித்து https://innovateindia.my
gov.in/nep2020-citizen/ என்ற இணையதளத்தில் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

இதற்கான கால அவகாசம் அக்டோபர்31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் இதில் பங்கேற்கலாம். கருத்துத் தெரிவிப்பதற்கான கால அவகாச நீட்டிப்புதொடர்பாகவும், கருத்து தெரிவிப்பதன் அவசியத்தையும் அனைத்துத்தரப்பினருக்கும் தெரியப்படுத்த வேண்டும்’’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது.