tamilnadu

img

மைசூரு மேயரான முஸ்லிம் பெண்.... மதச்சார்பற்ற ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி பாஜகவைத் தோற்கடித்து

மைசூரு:
பாஜக ஆளும் கர்நாடகமாநிலம் மைசூரு மாநகராட்சியில், பாஜக வேட்பாளரைத் தோற்கடித்து, முஸ்லிம் பெண் ஒருவர்மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.பெரும்பான்மைவாதத்தைத் தூண்டிவிட்டு, முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி விடலாம் என்று பாஜக அனைத்து வகையிலும் முயற்சி மேற்கொண்டு வரும் சூழலில், மைசூரு மேயர் தேர்தல் பாஜகவுக்கு கிடைத்த அடியாக அமைந்துள்ளது.64 கவுன்சிலர்களைக் கொண்ட மைசூரு மாநகராட்சியில் பாஜக-வுக்கு போதிய கவுன்சிலர்கள் இல்லை. 21 கவுன்சிலர்கள் மட் டுமே உள்ளனர். என்றாலும், வழக்கம்போல ஆள்பிடி வேலைகளை நடத்தியும், எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி ஆகியோருக்கு உள்ள 10 வாக்குகளை வைத்தும், மேயர்பதவியைப் பிடித்து விடலாம் என்று கணக்கு போட்டது. கீதாஸ்ரீ என்பவரை வேட்பாளராகவும் நிறுத்தியது. 

மறுபுறத்தில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி, சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் தஸ்னிமுக்கை வேட்பாளராக களமிறக்கியது. அக்கட்சிக்கு 18 கவுன்சிலர்கள் இருந்த நிலையில், 19 கவுன்சிலர் களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவு அளித்தது.இதையடுத்து, தேர்தல் முடிவில், தஸ்னிமுக் 47 வாக்குகளைபெற்று மேயராக வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் கீதாஸ்ரீ 23 வாக்குகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.தஸ்னிமுக் மேயர் ஆனதன் மூலம் மைசூரு மாநகராட்சியின் இளம்வயது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். அவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.இங்கு துணைமேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஸ்ரீதர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

;