tamilnadu

img

மோடி, அமித்ஷாவுக்கு போட்டி ‘ஆஸ்கர்’ விருதுகள்!

புதுதில்லி:
சினிமாவிற்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியானது, இந்தியாவில் நடிப்புக்காக ‘ஆஸ்கர் விருது பெறத் தகுதியானவர்கள்’ என்று பட்டியலை வெளியிட்டுள்ளது.அதில், சிறந்த நடிகர், வில்லன் நடிகர் உள்பட பல துறைகளில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு விருதுகளை அறிவித்துள்ளது.

சிறந்த நகைச்சுவைக்கான விருதுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தில்லிபாஜக தலைவர் மனோஜ் திவாரி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு இடையிலான போட்டியில், மனோஜ் திவாரியே வெற்றிபெற்றுள்ளதாக கூறியுள்ளது.அதேபோல, உத்தரப்பிரதேச சாமியார் முதல்வர் ஆதித்யநாத், மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் ஆகியோர் களத்தில் இருந்தாலும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவே, சிறந்த வில்லன் நடிகர் என்று அறிவித்துள்ளது.எல்லாவற்றுக்கும் மேலாக, பாஜக எம்.பி.யும் மாலேகான் குண்டுவெடிப்பு சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர், உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் ஆகியோரை வீழ்த்தி சிறந்த நடிகருக்கான விருதை பிரதமர் மோடி தட்டிச் செல் வதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் இந்த ஆஸ்கர் விருதுஅறிவிப்பு தொடர்பான வீடியோக்கள், பாஜகவினர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள் ளது.

;