tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

மோடியின் சிந்தனையற்ற, திட்டமிடப்படாத ஊரடங் கும் சரி; அதனை தளர்த்துவதும் சரி! இரண்டுமே அழிவையும் உயிரிழப்பு களையுமே உருவாக்கியுள்ளது. இந்த பேரிடரை எதிர்கொள்வதிலோ அல்லது நிவாரணம் தருவதிலோ அல்லது வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரத்தை மீட்பதிலோ மோடி அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை. நீடித்த வளர்ச்சி மற்றும் பாரபட்சம் இல்லாமல் சமவாய்ப்புகள் அடிப்படையில் எத்தகைய திட்டமும் இந்த அரசாங்கத்திடம் இல்லை.

குஜராத் மாநிலத்தில் மருத்துவ மனைகளின் நிலைமை மிக மோசமாக இருப்பது குறித்து அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமை யாக சாடியுள்ளது. குறிப்பாக அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த கொரோனா மரணங் களில் 45 சதவீதம்-377 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இந்த குஜராத் மாநிலத்தைத்தான் மோடியும் பா.ஜ.க.வும் பல ஆண்டுகளாக ஆட்சி செய்கின்றனர். கோவிட் 19 பாதிப்புகளை மூடி மறைப்பதும் இடம் பெயர் தொழிலாளர்களை மோசமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதும் மருத்துவ மனைகளில் எவருக்கும் சிகிச்சை  தர இயலாத சூழல் உருவாகியிருப்ப தும்தான் இன்றைய குஜராத்தின் நிலை. இந்தியா முழுவதையுமே குஜராத் போல மாற்றுவதற்குதான் மோடி முயன்று கொண்டுள்ளார்.

மார்ச் 24: ஊரடங்கு அறிவிப்பு: 564 பேர் பாதிப்பு; மரணம் – 10. இரண்டு மாத ஊரடங்குக்கு பிறகு மே 24: பாதிப்பால் சிகிச்சை பெறுவோர் 73,560; மரணம் 3867. ஊரடங்கிலிருந்து வெளியே வர என்ன திட்டம் மோடிஜி?