tamilnadu

img

ரயில் டிக்கெட் டீ-கப்பைக் கூட விட்டு வைக்காத சவுகிதார் அனைத்து திசையிலும் அதிகார துஷ்பிரயோகம்

பிரதமர் மோடியும், பாஜகவினரும் தேர்தலுக்காக ஏகப்பட்ட நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர். அதில், ‘நானும் காவல்காரன் தான்’ என்ற ‘மெய்ன் பி சவுகிதார்’ என்ற நாடகமும் ஒன்றாகும். பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தங்களது சமூகவலைத்தள கணக்குகளில் ‘சவுகிதார்’ என்ற பெயரை சேர்த்துக் கொண்டதுடன், அரசின் கட்டுப் பாட்டிலுள்ள விமான டிக்கெட், ரயில் டிக்கெட், போர்டிங் பாஸ், ரயில்வேயில் டீ வழங்கப்படும் பேப்பர் கப் ஆகியவற்றிலும் ‘சவுகிதார்’ விளம்பரத்தை சத்தமில்லாமல் சேர்த்தனர். குறிப்பாக, சதாப்திவிரைவு ரயிலில் ‘மெய்ன் பி சவுகிதார்’ என்று எழுதப்பட்ட பேப்பர் கப்புகள் ஏராளமாக விநியோகம் செய்யப்பட்டன. மோடி அரசின் அதிகார துஷ்பிர

யோகம் குறித்து, சிலர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ரயில்வே நிர்வாகமேபாஜக ஆதரவு பிரச்சாரம் செய் வதா? என்று கேள்விகளை எழுப்பினர். தேர்தல் ஆணையமும் இது தொடர்பாக ரயில்வே நிர்வாகத் திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, ‘சவுகிதார்’ பேப்பர் கப்புகளை திரும்பப்பெற்றுக் கொண்டுவிட்டதாகவும், இந்த பேப்பர் கப்புகளை விநியோகித்த ரயில்வே காண்ட்ராக்டருக்கு ரூ. 1 லட்சத்தை அபராதமாக விதித்திருப்பதாகவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

;