tamilnadu

img

இந்துஸ்தான், பாரத் பெட்ரோலிய நிறுவனங்களின் லாபம் குறித்த பி.ஆர் நடராஜன் கேள்விக்கு அமைச்சர் பதில் 

இந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களில் கிடைத்த லாபம் குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கேள்விக்கு எரிசக்தித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் பதில் அளித்துள்ளார்.
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனங்களின் பங்கு விற்பனை, முதலீடு, லாபம் ,மற்றும் அவைகளின் பணியாளர் சங்கங்கள் மேற்கொள்ள இருக்கும் வேலை நிறுத்தம் குறித்து, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திங்களன்று கேள்வி எழுப்பினார். 

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்.பி.சி.எல்) நிறுவனத்தில் உள்ள  தனது பங்குகளை விற்பனை செய்வதற்கான திட்டம் ஏதும் அரசாங்கம் முன்வைத்துள்ளதா என்பதையும், அப்படியானால், அதன் விவரங்களுடன் அதன் காரணங்களையும் தெரிவிக்க வேண்டும். 
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹெச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் முதலீடு மற்றும் லாபம் கிடைத்துள்ளது. 
ஹெச்பிசிஎல் மற்றும் பிபிசிஎல் ஊழியர்கள் 28.11.2019 அன்று ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தம் மேற்கொள்ள  முடிவு செய்துள்ளனர் என்பதை அரசாங்கம் அறிந்திருக்கிறதா? 
அப்படியானால், சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரச்சனைகளை தீர்க்கும் நோக்கில்,அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் எடுத்துள்ள / எடுக்கப்பட இருக்கிற நடவடிக்கைகள் என்னென்ன?
பி.ஆர்.நடராஜனின் கேள்விக்கு எண்ணெய் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் தர்மேந்திரப் பிரதான் அளித்த பதில் பின்வருமாறு
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓ.என்.ஜி.சி) 2018 ஜனவரியில்,இந்திய அரசிடமிருந்து, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்.பி.சி.எல்) இல் உள்ள முழு பங்குகளையும் (51.11%) கையகப்படுத்தியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஹெச்பிசிஎல் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) முதலீடு மற்றும் லாபம் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 
எச்.பி.சி.எல் முதலீடு (தோராயமாக): 36,174 கோடியாகும். வரிக்குப் பின் லாபம்: 25,053 கோடியாகும். பிபிசிஎல் முதலீடு (தோராயமாக): 46,371 கோடி .வரிக்குப் பின் லாபம்: 35,664 கோடி.
எச்.பி.சி.எல் மற்றும் பிபிசிஎல் ஆகியவை தங்கள் பணியாளர் சங்கங்கள்
28.11.2019 அன்று மேற்கொள்ளப்போகும் வேலை நிறுத்தம் பற்றிய நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன. இது சம்பந்தமாக நிர்வாகம் தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்தையில் ஈடுபட்டு இருப்பதோடு சமரச அமைப்பினையும் அணுகி உள்ளது.

;