tamilnadu

img

விபத்தில் பலியான புலம்பெயர் தொழிலாளர்கள் மட்டும் 198 பேர்!

புதுதில்லி:
நடந்தும், வாகனங்களிலும் சொந்த ஊருக்குச் சென்ற புல பெயர் தொழிலாளர்களில், சுமார் 198பேர் சாலை விபத்தில் தங்களின் உயிரைப் பறிகொடுத்து இருப்பதாக ‘சேவ்லைப் பவுண்டேசன்’ எனும் அமைப்புஒரு கணக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய நரேந்திர மோடி அரசு,முன்யோசனையின்றி அமல்படுத் திய பொதுமுடக்கம் காரணமாக, லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே வேலைவாய்ப்பை இழந்து விட்ட அவர்கள், வருமானம் இல்லாமல் பசியிலும் பட்டினியிலும் பெரும் துயரத்தைச் சந்தித்தனர். ஒருகட்டத்தில் நடந்தும், கிடைக் கக் கூடிய சரக்கு வாகனங்களில் ஏறியும் ஊருக்குப் புறப்பட்டனர்.இவ்வாறு சென்ற நபர்களில் தான், மார்ச் 25 முதல் மே 31 வரை 198 தொழிலாளர்கள் சாலை விபத்துக்களில் பலியானதாக ‘சேவ் லைப் பவுண்டேஷன்’ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

“பொதுமுடக்கக் காலத்தில், அதாவது மே 31 வரை நாடு முழுவதும்1461 விபத்துக்கள் நடந்துள்ளன.750 உயிர்கள் போயிருக்கின்றன. இவற்றில் 198 பேர் கூலித்தொழிலாளர்கள். அதிகபட்சமாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 245 பேர் பலியாகிஉள்ளனர். இது மொத்த உயிர்ப்பலியில் சுமார் 30 சதவிகிதம். இதேபோலதெலுங்கானா மற்றும் மத்தியப்பிரதேசத்தில் தலா 56 பேர், பீகாரில் 43பேர், பஞ்சாப்பில் 38 பேர், மகாராஷ்டிராவில் 36 பேர், ஜார்கண்ட்டில் 33 பேர், ஹரியானாவில் 28 பேர் பலியாகி உள்ளனர்.
பொதுமுடக்கத்தின்- மார்ச் 25முதல் ஏப்ரல் 14 வரையிலான முதல்கட்டத்தில் 67 உயிர்களும், ஏப்ரல் 15 முதல் மே 3 வரையிலான இரண்டாம் கட்டத்தில் 70 உயிர்களும், மே 4முதல் 17 வரையிலான மூன்றாவது கட்டத்தில் 291 பேர், மே 18 முதல் 31வரையில் 322 உயிர்கள் பலியாகிஇருக்கின்றன” என்று புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விபத்துக்களில் 1390 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் “சேவ் பவுண்டேசன்” கூறியுள்ளது.

;