tamilnadu

img

பெரும்பான்மைவாதம் தேசியவாதம் அல்ல: ரோமிலா தாப்பர்

பெரும்பான்மைவாதம் தேசியவாதம் அல்ல என்று புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பேராசிரியர் ரோமிலா தாப்பர் கூறினார்.

தில்லிப் பல்கலைக் கழக மாணவர்கள் அமைப்பான கர்வான், வியாழன் அன்று, முகநூல் நேரலை மூலமாக நடத்திய அமர்வில் ரோமிலா தாப்பர் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.  அப்போது அவர் கூறியதாவது:

“தேசியவாதம் என்பது சமூகத்தில் உள்ள மக்கள் கூட்டாக எப்படி சிந்திக்கிறார்கள் என்பதைப் பிரதிபலிப்பதாகும்.  கூட்டாக என்பதன் பொருள் சமூகத்தில் உள்ள, நாட்டில் உள்ள ஒவ்வொருவரையும் சம அந்தஸ்துடனான பிரஜைகளாகக் குறித்திடும். ஆனால், தேசியவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட ஒற்றை அடையாளத்தால் வரையறுக்கப்படும்போது, அது மொழியாக இருந்தாலும் சரி, அல்லது மதமாக இருந்தாலும் சரி அல்லது இனமாக இருந்தாலும் சரி, பின் தேசியவாதம் என்பது பெரும்பான்மைவாதம் என்பதற்குள் தடம்புரண்டுவிடும். பெரும்பான்மைவாதம் தேசியவாதம் அல்ல.

சுதந்திரத்திற்கான போராட்டம் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்த அனைத்து இந்தியர்களாலும் மேற்கொள்ளப்பட்டதாகும். எனினும், பிரிட்டிஷார் தலைமையிலான தேசியவாதம் மதத்தின் அடிப்படையில் வரையறுத்த இரு தேசக் கொள்கையை இங்கே சிலர் ஏற்றுக்கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். ”

இவ்வாறு பேராசிரியர் ரோமிலா தாப்பர் கூறினார்.