tamilnadu

img

ம.பி. மாநில முன்னாள் எம்.பி. பாஜகவிலிருந்து விலகல்....

இந்தூர்:
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த, மக்களவைமுன்னாள் உறுப்பினரான பிரேம்சந்த் போராசி, பாஜக-விலிருந்து விலகியிருக்கிறார்.

மத்தியப் பிரதேச மாநில தலித் மக்களிடையே செல்வாக்கு படைத்த தலைவர், குட்டு என்று அழைக்கப்படும் பிரேம்சந்த் போராசி ஆவார்.காங்கிரசில் எம்.பி.யாக இருந்த இவருக்கும், ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் ஆகாது. ஒருகட்டத்தில் சிந்தியாவின் அதிகாரம் ஓங்கிய நிலையில், குட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு,காங்கிரசிலிருந்து விலகி பாஜக வில் சேர்ந்தார்.அவருக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் உஜ்ஜைனிதொகுதியில் பாஜக சீட்வழங்கியது. அதில் வெற்றிபெற முடியாவிட்டாலும் பாஜக விலேயே இருந்து வந்தார்.ஆனால், காங்கிரசிலிருந்த ஜோதிராதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 24 பேருடன் அண்மையில் பாஜகவில் சேர்ந்தார். அவருக்கு உடனடியாக மாநிலங்களவை எம்.பி. பதவியையும் பாஜக வழங்கியது.
இதனால் அதிருப்தி அடைந்த பிரேம்சந்த் போராசி, இரண்டே வருடங்களில் பாஜகவில் இருந்து விலகி மீண்டும்காங்கிரசில் இணைந்துள்ளார். ம.பி. மாநிலத்தில் 24 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ரிசர்வ் தொகுதியான சன்வார் சட்டப்பேரவை தொகுதியில் போராசி போட்டியிடுவார் என்றுதகவல்கள் வெளியாகியுள்ளன.

;