tamilnadu

img

தேசிய விருதைப் புறக்கணித்த கேரள திரைப்பட இயக்குநர்... குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை யைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ்அதிகாரி அப்துர் ரஹ்மான்தனது ஐஜி பதவியை ராஜினாமா செய்தார். எழுத்தாளரும், வாரணாசி இந்துப் பல்கலைக்கழகத்தின் முன்னாள்உருதுத்துறைத் தலைவருமான பேராசிரியர் யாகூப் யாவர், உத்தரப்பிரதேச அரசுவழங்கிய அகாடமி விருதைத் திருப்பி அனுப்பினார்.

இந்நிலையில், ‘சூடானி ப்ரம் நைஜீரியா’ (Sudani from Nigeria) என்ற மலையாளப் படத்துக்காக தேசிய விருது பெற்ற- கேரள இயக்குநர் ஜகாரியா முகம்மது, தேசிய விருது விழாவையே புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, இயக்குநர் ஜகாரியா முகம்மது தனதுமுகநூல் பக்கத்தில், ‘குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான எனது போராட்டம்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில், “குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக நானும் ‘சூடானி ப்ரம் நைஜீரியா’ படக் குழுவினரும்- எழுத்தாளர் முஹ்சின் பராரி மற்றும்படத்தின் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து, தேசிய திரைப்பட விருது விழாவில் இருந்துவிலகி இருப்போம்” என்று அறிவித்துள்ளார்.‘சூடானி ப்ரம் நைஜீரியா’திரைப்படம், 66-ஆவது தேசிய திரைப்பட விழாவில், சிறந்த மலையாள மொழிப் படத்துக்கான விருதைப் பெற்ற படம் ஆகும். மேலும்,இயக்குநர் ஜகாரியா முகம் மதுவின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

;