tamilnadu

img

காஷ்மீரிகளும் வாழ விரும்புகிறோம்

பத்திரிகையாளர் சந்திப்பில் முகமது யூசுப் தாரிகாமி கண்ணீர்

புதுதில்லி, செப்.17- காஷ்மீரிகள், மோடியின் எதேச்சதிகார ஆட்சியின்கீழ் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பின ரும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த அம்மக்களின் அன்புத் தலைவருமான முகமது யூசுப் தாரிகாமி கண்ணீருடன் தெரிவித்தார். புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலக மான ஏ.கே.கோபாலன் பவனில் செவ்வாய்க் கிழமை மாலை பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது. அப்போது முகமது யூசுப் தாரிகாமி காஷ்மீர் நிலைமைகள் குறித்து மிகவும் உணர்ச்சிகரமான குரலில் கூறியதாவது: காஷ்மீரில் எவருக்கு எதிராகவும் ஒரு துப்பாக்கிக் குண்டுகூட பாயவில்லை, எவரும் கொல்லப்படவில்லை என்று பாஜக கூறிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மை என்ன  தெரியுமா? காஷ்மீரிகள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறார்கள். நாங்கள் என்ன கேட்கிறோம்? நாங்களும் வாழ விரும்புகிறோம். ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ  விரும்புகிறோம். (இவ்வாறு இவர் கூறும்போது கண்களில் வந்த கண்ணீரை அவரால் கட்டுப் படுத்த முடியவில்லை.)

மாநிலத்தில் இயங்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் எவரிடமும் கலந்தாலோசிக்காமல், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை ரத்து செய்ததும், மாநிலத்தை இரண்டு கூறு களாக சிதைத்ததும் நரேந்திர மோடி ஆட்சி யின் விரக்தியையே காட்டுகிறது. ஒரு சராசரி காஷ்மீரி, எங்களுக்கு சொர்க்கம் வேண்டும் என்று உங்களிடம் கேட்கவில்லை. தயவுசெய்து நாங்களும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்திட ஒரு வாய்ப்பு தாருங்கள் என்றுதான் கேட்கிறார்கள்.  

காஷ்மீரில் பலதடவை மோசமான நிலைமை களை நாங்கள் சந்தித்திருக்கிறோம். எனினும் இப்போதுள்ளது போன்று ஒரு கடுமையான நிலை இதற்கு முன் ஏற்பட்டதில்லை. ஜம்மு-காஷ்மீர் மாநிலமே, கடந்த நாற்பது நாட்களாக ஒருவர்க்கொருவர் சந்திக்க முடியா மல் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுமையாக இயங்கிடவில்லை. இதேபோன்ற தொரு நிலைமையை இங்கே, புதுதில்லியில், ஒரு வார காலத்திற்கு உங்களால் முயற்சி செய்து  பார்க்க முடியுமா?

காஷ்மீரிகள் இந்தியாவுடன் இணைந்திட  கட்டாயப்படுத்தப்படவில்லை. நாங்களாகவே தான் எங்கள் விருப்பத்தின் பேரில் மதச்சார் பற்ற இந்தியாவுடன் இணைந்தோம். இன்றைய தினம், காஷ்மீர் மக்கள் மற்றும் நாட்டின் இதர பகுதி மக்களின் கடின உழைப்பின் காரணமாக நம்மிடையே ஏற்பட்ட பந்தம் இன்றைக்குத் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. பத்திரிகையாளர்களே, தயவுசெய்து நாங்கள் சொல்வதையும் கேளுங்கள். அரசுத் தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள். காஷ்மீர் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்றும் கேளுங்கள். நாங்கள் கொல்லப்படுவதையோ அல்லது ஒழித்துக்கட்டப்படுவதையோ விரும்ப வில்லை. இவ்வாறு யூசுப் தாரிகாமி கூறினார்.

சீத்தாராம் யெச்சூரி

செய்தியாளர் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது: “அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதை ஆட்சேபித்து மார்க்சிஸ்ட்  கட்சியின் சார்பில் தனியே மனு தாக்கல் செய்திட இருக்கிறோம். இப்போது மிகவும் முக்கியமான அம்சம், காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரங்கள் பற்றிய தாகும். கடந்த 40 நாட்களாக அங்கே இயல்பு வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டிருக்கிறது. இன் னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்று  எவருக்கும் தெரியாது. தரைவழி தொலைபேசி கள் இன்னும் இயங்கத் தொடங்கிடவில்லை. தோழர் தாரிகாமி இல்லத்தில் உள்ள தொலை பேசியும் மற்றும் கட்சித் தோழர்கள் பலரது வீடு களில் உள்ள தொலைபேசிகளும் இன்னும் செயல்படத் தொடங்கவில்லை. பலமுனைகளி லும் பற்றாக்குறை நிலவுகிறது. குறிப்பாக மருத்து வமனைகளில் மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது.” இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.        

   (ந.நி.)
 

;