tamilnadu

img

கொரோனாவை பரப்பியது அமெரிக்க ராணுவம்தான்... சீன வெளியுறவுத்துறை குற்றச்சாட்டு

புதுதில்லி:
சீனாவின் வுகான் மாகாணத் தில், அமெரிக்க ராணுவம்தான் கொரோனா வைரஸை பரப்பி இருப்பதாக சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜோலிஜியான் குற்றம் சாட்டியுள்ளார்.சீனாவின் வுகான் நகரில், 2019 டிசம்பர் மாதம் முதல் கொரோனாஎனும் உயிர் கொல்லி வைரஸ் பரவியது. முதலில் சீனாவில் மட்டுமே ரவிய இந்த வைரஸ் தற்போது சீனாவுக்கு சென்றவர்கள் மூலம்வேறு நாட்டினருக்கும், அவர்கள்மூலம் இன்னொரு நாட்டினருக் கும் என பரவி வருகிறது.

சீனாவில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கொரோனா பாதிப்பு 2 மாதங்கள் வரை வெளியே சொல்லவில்லை என்றும், அதனால்தான் பாதிப்பு அதிகமாகி விட்டது என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் தேசியபாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் திடீர் குற்றச்சாட்டை தற்போது கிளப்பியுள்ளார்.இதற்கு சீன வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் ஜோலிஜியான் டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.அதில், “அமெரிக்காவில் எத்தனை பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது? எந் தெந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்?இதுபற்றி அமெரிக்கா வெளிப்படையாக கூற வேண்டும்” என்று கூறியிருப்பதுடன், “இந்த வைரஸை வுகானுக்கு அமெரிக்க ராணுவம்தான் பரப்பியிருக்கும்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். “இது தொடர்பாக அமெரிக்கா எங்களுக்கு நிச்சயம் விளக்கம் அளிக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

;