tamilnadu

img

டி.வி.யை உடைத்தவர்களை நினைத்தால் பாவமாக இருக்கிறது... சீனாவின் விவோ நிறுவனமே மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சர்

ஸ்ரீநகர்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு, கடந்த காலத்தில் அனுமதிக்கப்பட்ட அனைத்து விளம்பரதாரர்களையும் மீண்டும்அனுமதிப்பது என பிசிசிஐ - ஐபிஎல் நிர்வாகம் முடிவு எடுத் துள்ளது.

அதாவது, ஆண்டொன்றுக்கு ரூ. 450 கோடி வழங்கும், ஐபிஎல்-லின் முதன்மை விளம்பர நிறுவனமான சீனாவைச் சேர்ந்த விவோ-வுக்கும் அனுமதி வழங்கப்பட் டுள்ளது.இந்நிலையில், சீனப் பொருட் களை புறக்கணிக்க வேண்டும் என்று கூறிவிட்டு, தற்போது சீனநிறுவனம்தான் ஐபிஎல் கிரிக்கெட்தொடரை வழங்கும் என்று அறிவித்திருப்பதை நினைத்தால் சிரிப்பு வருகிறது என்று தேசியமாநாட்டுக் கட்சித் தலைவரும், காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா கிண்டலடித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உமர் அப்துல்லா, “அண்மையில் சீனாவின் பொருட்களை புறக்கணிப்பதாக நினைத்து, அந்நாட்டுத் தயாரிப்பிலான தொலைக்காட்சிகளை வீட்டின் பால்கனியில் இருந்து முட்டாள்கள் சிலர் தூக்கி எறிந் தார்கள். இப்போது, அவர்களை எல்லாம் தற்போது நினைத்தால் பாவமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.“சீன செயலிகள் தடை செய்யப்பட்ட போது, சீனாவுக்கு எதிராக இந்தியாவின் திடீர் காய்நகர்த்தல், எதிர்பார்க்காத மூவ், கணிக்க முடியாத அதிரடி, சீனாவை தாக்க கூடிய மூவ் என்று சிலர் வெறியேற்றினார்கள். ஆனால்இப்போது நம்மால் சீனாவின்விளம்பரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப்இல்லாமல் இருக்க முடியாது என்பதை ஐபிஎல் உறுதிப்படுத்தி விட்டது” என்று உமர் அப்துல்லா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

;