tamilnadu

img

சிஏஏ போராட்டத்தில் பங்கேற்றது குற்றமாம்... தில்லியில் ஜேஎன்யு மாணவிகள் 2 பேர் கைது!

புதுதில்லி, மே 24- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக, கடந்த ஒரு மாத காலத்தில் பலரை மத் திய பாஜக அரசு கைது செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டு மாணவிகள் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். கடந்த பிப்ரவரியில் ஜாப்ராபாத் மெட்ரோ நிலையத்தில் நடைபெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு உள்ளிருப்புப் போரா ட்டத்தை பெண்கள் தலைமைத் தாங்கி முன்னெடுத்தனர்.

இதில் பங்கேற்றதற்காக, ஜவ ஹலால் நேரு பல்கலைக்கழகத்தின் தேவங்கனா கலிதா மற்றும் நடாஷா நர்வால் ஆகிய 2 மாணவிகளை தில்லி போலீசார் தற்போது கைது செய்துள்ள னர். இவர்கள் மீது, ஐபிசி (இந்திய தண்டனைச் சட்டம்) பிரிவு 186 (பொது ஊழியர்களின் பொதுச் செயல்பாடு களைத் தடுப்பது) மற்றும் 353 (அரசு ஊழியரை தனது கடமையை நிறை வேற்றுவதைத் தடுப்பது) ஆகிய பிரிவு களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற போரா ட்டத்தில், சங்-பரிவாரங்கள் புகுந்தது வன்முறையில் ஈடுபட்டனர். பாஜக தலைவரான தீபக் மிஸ்ரா-தான் வன்முறைக்கு முக்கியக் காரணம். ஆனால், அவர்களை கைது செய்யாத தில்லி காவல்துறை, இஸ்லா மிய மாணவர்களையும், மாணவிகளை யும் மட்டும் தேடித்தேடி கைது செய்து வருகிறது.

;