tamilnadu

சீனாவை விட இந்தியா 2 மடங்கு வளர்ச்சி... மக்கள் தொகை அதிகரிப்பில்

புதுதில்லி, ஏப். 15 -உலக மக்கள்தொகை குறித்து, ஆய்வு மேற்கொண்டுவரும் ‘யுஎன் எப்பிஏ’ அமைப்பு, கடந்த 10 ஆண்டுகளாக எடுத்த கணக்கெடுப்பு முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், இந்திய மக்கள் தொகை,சீனாவை விட 2 மடங்கு வேகத்தில்அதிகரித்து வருவது தெரியவந்துள் ளது.2018-இல் உலக மக்கள் தொகையானது 760 கோடியாக இருந்தது. இது2019-இல் 770 கோடியாக உயர்ந்துள் ளது. இந்தியாவின் மக்கள் தொகை 2010 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் 1.2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது உலக சராசரி மக்கள் தொகை அதிகரிப்பு விகிதமான 1.1 சதவிகிதத்தை விட அதிகமாகும். ஆனால், சீனாவில் மக்கள் தொகைஅதிகரிப்பு 0.5 சதவிகிதம் என்ற அளவிலேயே உள்ளது. இதனால், சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவின் மக்கள்தொகை அதிகரித்து வருவது உறுதியாகியுள்ளது.

;