tamilnadu

img

5.9 சதவிகித வீழ்ச்சியில் இந்தியாவின் ஜிடிபி.... ஐக்கிய நாடுகள் ஆய்வறிக்கை கணிப்பு

புதுதில்லி:
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து, ஐக்கிய நாடுகள்அவையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், கொரோனா சூழலில் உலகப் பொருளாதாரம் கடுமையாக சரிந்து நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. உலக பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 4.3 சதவிகிதமாகவே இருக்கும். இதனால்உலக அளவில் ரூ. 441 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளது.வளர்ந்த நாடுகளிலேயே உற்பத்தித் துறையில் 2 சதவிகிதம்அளவுக்கு சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. வளரும் நாடுகளும் கடுமையாக பாதிக்கப்படும். அந்த நாடுகளில் 9 முதல் 12 கோடி மக்கள்கடுமையான வறுமைக்கு தள்ளப் படுவார்கள். சுமார் 30 கோடி பேர் உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவர் என்றும் ஐக்கிய நாடுகள் அவை கணித்துள்ளது.அமெரிக்காவின் பொருளாதார வளா்ச்சி, நடப்பாண்டில் 5.4 சதவிகிதம் குறையும் என்று கூறியுள்ள ஐக்கிய நாடுகள் அவை, இந்திய பொருளாதாரமும் நடப்பாண்டில் 5.9 சதவிகிதம் அளவிற்கு வீழ்ச்சியைச் சந்திக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. 2021 நிதியாண்டில் இது மாறும். இந்திய பொருளாதாரமானது அடுத்த ஆண்டு 3.9 சதவிகிதமும், அமெரிக்கப் பொருளாதாரம் 2.8 சதவிகிதமும் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதேநேரம் சீனாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 1.3சதவிகித வளர்ச்சியைப் பெறுவது டன், 2021-ஆம் ஆண்டில் இந்த வளர்ச்சி 8.1 சதவிகிதமாக அதிகரிக்கும் எனவும் ஐ.நா. அவையின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு அமைப்பு கணித்துள்ளது.

;