tamilnadu

img

நிதிப் பற்றாக்குறை 7 சதவிகிதத்தை எட்டும்.... பிரிக் ஒர்க் ரேட்டிங்ஸ் கணிப்பு....

புதுதில்லி:
நடப்பு 2020- 2021 நிதியாண்டில், நாட்டின் நிதிப் பற்றாக்குறையானது 7 சதவிகிதத்தைத் தொடலாம் என்று ‘பிரிக்ஒர்க் ரேட் டிங்ஸ்’ (Brickwork Ratings) கணித்துள்ளது. 

மோடி அரசானது, நடப்பாண்டு பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறையை 3.5 சதவிகிதத்திற்குள் வைத்திருக்க இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், யதார்த்தத்தில் அது இரட்டிப்பாகும் என்று ‘பிரிக்ஒர்க் ரேட்டிங்ஸ்’ கூறியுள்ளது.நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், மத்திய அரசின் வருவாயானது கடந்தஆண்டோடு ஒப்பிடும் போதுமிக குறைவாகும். வருமானவரிகளின் வருவாய் (தனிநபர் வருமான வரி, கார்ப்பரேட் வரி வருவாய்) 30.5 சதவிதமும், ஜிஎஸ்டி வசூலானது 34 சதவிகிதமும் குறைந்துள்ளதாக மத்திய கணக்குத்தணிக்கை அலுவலகத்தின்தரவுகள் வெளியாகியுள்ளன. மறுபுறத்தில், கொரோனாநெருக்கடியால் செலவினங் கள் கணிசமான அளவு உயர்ந்துள்ளன. குறிப்பாக சொன்னால் முன்பை விட13.1 சதவிகிதம் அதிகரித்துள்ளன. மக்களும்  கொரோனா நெருக்கடியினால் தத்தளித்து வரும் நிலையில், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் மூலமும், இன்னும் சில திட்டங்கள் மூலமாகவும் ஊக்குவிப்பு தொகையை அரசு அறிவித்துள்ளது.இவற்றின் காரணமாக முதல் காலாண்டில் அரசு நிர்ணயித்த இலக்கை விட83.2 சதவிகிதம் நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்று ‘பிரிக் ஒர்க் ரேட் டிங்ஸ்’ குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய சூழலே தொடர்ந்தால், அரசு பெரும்பின்னடைவை சந்திக்க நேரிடும்; அரசின் வருவாயும் பாதிக்கப்படும். இது முன்புமதிப்பிட்டதை விட மிகமோசமாக பாதிக்கும் என் றும் ‘பிரிக் ஒர்க் ரேட்டிங்ஸ்’  கணித்துள்ளது.