tamilnadu

img

அமெ.வின் நவீன டிரோன்களை வாங்கும் இந்தியா

புதுதில்லி:
ஈரான் ராணுவ தளபதி ஜெனரல் காஸிம் சுலைமானியை கொல்வதற்கு அமெரிக்கா பயன்படுத்திய எம்.கியூ.9 ரீப்பர் ரக டிரோன்களை வாங்க  இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ஆயிரம் அடி உயரம்வரை பறந்து,  இலக்குகளை துல்லியமாக தாக்கும் இந்த டிரோன்களை அமெரிக்காவின் ஜெனரல் அட்டோமிக்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. இவைகளால் 27 மணி நேரம் தொடர்ச்சியாக பறக்க முடியும். ஒபாமா அமெரிக்க  அதிபராக முதல் தடவை இருந்த போதே இந்த   டிரோன்களை வாங்க இந்தியா விருப்பம் தெரிவித்தது. இந்த நிலையில் தலா 460 கோடியே 70 லட்சம் ரூபாய் விலையில், 10 டிரோன்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முடிவெடுத்துள்ளதாக   கூறப்படுகிறது. பாகிஸ்தானில் எந்த இலக்கையும் தாக்குவதுடன், சீன எல்லைப்புறங்களில் நமது பாதுகாப்பை அதிகரிக்கவும் இவை மிகவும் உதவியாக இருக்கும்.

;