tamilnadu

img

வேலைநாளை 12 மணி நேரமாக அதிகரிப்பது தவறு...

புதுதில்லி:
கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்தி, 44 தொழிலாளர் நலச்சட்டங்களில் 38 சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்கு மோடி அரசு திட்டமிட்டு வருகிறது.முன்னோட்டமாக, பாஜக ஆளும் உத்த
ரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் 12 மணிநேர வேலை கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. ஊதிய உயர்வு, மிகை உழைப்புக்கான ஊதியம் ஆகியவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.

கார்ப்பரேட் முதலாளிகளை திருப்திப்படுத்தும் வகையில் பாஜக அரசுகள் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகளுக்கு, இடதுசாரிக் கட்சிகள் மட்டுமன்றி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளன.இந்நிலையில், தொழிலாளர் சட்டத்திருத்த நடவடிக்கைகளுக்கு, இந்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு-வும் எதிர்ப்புதெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:இந்தியாவிலிருந்து கடந்த மார்ச்சில் 16 பில்லியன் டாலர் அந்நிய முதலீடு டாலர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதுபெரிய வாபஸ் தொகையாகும், இந்தியாஒரு மூடுண்ட கட்டுப்பாட்டு பொருளாதாரமாக மாறுகிறதோ என்று உலக முதலீட்டாளர்கள் பதற்றமடைகின்றனர். நாம் அத்தகைய பயங்களை நீக்க வேண்டும். தொற்று நோயைக் கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் ‘கட்டுப்படுத்தும் சமூகத்தை’ உருவாக்கிவிடக்கூடாது.வரும் மாதங்களில் பணவீக்க விகிதம்அதிகரிக்கும். ஆனால் இது உலகம் முழுவதுமே நடக்கக் கூடியதுதான். அதற்குள் தொழிலாளர் சட்டங்களை மாற் 12 மணி நேர வேலை என்றெல்லாம் செய்வதுதவறு.

இப்போதைக்கு அரசின் கவனம் முழுவதும் பசி, பட்டினி, தீவிர வறுமை நிலையை நோக்கி தள்ளப்படும், ஆயிரக்கணக்கான மக்களை, பாதுகாப்பதை நோக்கியே இருக்க வேண்டும்.பற்றாக்குறை அதிகரித்தாலும் கவலைப்படாமல் செலவினங்களை இந்தியாஅதிகரிக்க வேண்டும்.பல நூறுமைல்களை நடந்தே செல்பவர்கள் எதற்காக அப்படிச் செல்கிறார்கள்?குழந்தைகளைப் பார்ப்போமா, மனைவியை பார்ப்போமா, குடும்பத்தாரைப் பார்ப்போமா என்ற கவலைதான் காரணம்.நாம் இவர்களை விரைவில் அணுகி தேவையானதைச் செய்யவில்லை எனில்,அது நமது தோல்வியாகவே பார்க்கப் படும்.

ஒரு இந்தியக் குடிமகனாக, நான் ஒரு லட்சியார்த்தமான நபர். என் லட்சியம் இந்தியாவை பணக்கார நாடாகவோ, உலகின் சக்தி வாய்ந்த நாடாகவோ உருவாக்குவதல்ல. இந்தியா அற மதிப்பீட்டின்அடிப்படையில் ஒரு சக்தியாக உலகிற்கு விளங்க வேண்டும் என்பதே ஆகும். இவ்வளவு சுயநலம் வேண்டாம் என் பதை நாம் உலகிற்குக் கற்று கொடுக்க முடியும். அனைத்து மனிதர்களுக்குமான பரிவு அதாவது அவர்கள் இனம், மதம்,சாதியைப் பார்க்காத பரிவு ஆகியவற்றை நாம் கற்றுக் கொடுக்க முடியும். இனம்,மதம் என்று வெறுப்புணர்வை தூண்டும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.இவ்வாறு கவுசிக் பாசு கூறியுள்ளார்.

;