tamilnadu

img

வாடகை படுக்கை பெயரில் ரூ. 280 கோடி சூறை.. கர்நாடக பாஜக அரசின் ஊதாரித்தனம்

பெங்களூரு:
கொரோனா தொற்று பராமரிப்பு மையங்களுக்கு 30 ஆயிரம் படுக்கை களை (Bed set) வாடகைக்கு எடுத்த வகையில் மட்டும் ரூ. 280 கோடி செலவிடப் பட்டு இருப்பதாக, கர்நாடக பாஜக அரசு காட்டியிருக்கும் கணக்கு கடும் சர்ச்சை யை ஏற்படுத்தியுள்ளது.30 ஆயிரம் படுக்கைகளை உற்பத்தி செய்வதற்கு ஆகும் மொத்த செலவே ரூ. 21 கோடிதான் எனும்போது, கர்நாடக பாஜக அரசு வாடகை என்ற பெயரில் மக்களின் வரிப்பணம் ரூ. 280 கோடியை சூறையாடியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதாவது படுக்கை ஒன்றின் சந்தை விலையே ரூ. 7 ஆயிரம்தான். ஆனால் நாளொன்றுக்கு ரூ. 800 விகிதம் 14 நாட்களில் ஒவ்வொரு படுக்கைக்கும் ரூ. 11 ஆயிரத்து 200-ஐ கர்நாடக அரசு வாடகையாக அள்ளி இறைத்துள்ளது.எடியூரப்பா தலைமையிலான கர்நாடக பாஜக அரசின் இந்த ஊதாரித்தனம் பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதன் பின்னணியில் ஊழல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆனால் தனக்கு ஒன்றுமே தெரியாததுபோல பழியைத் தூக்கி அதிகாரிகள் மீது போடும் முயற்சியில் முதல்வர் எடி யூரப்பா இறங்கியுள்ளார்.

;