tamilnadu

img

அரசியல் தொடர்பு வழக்குகளில் சிபிஐ செயல்பாடு மோசம்!

புதுதில்லி:
மத்தியப் புலனாய்வுக் கழகமான ‘சிபிஐ’ அமைப்பை உருவாக்கிய டி.பி. கோலியைநினைவுகூரும் வகையில், தில்லியில் செவ்வாயன்று கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில், அதில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.அப்போது அவர் பேசியிருப்பதாவது:

சிபிஐ அமைப்பானது, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு தனது கடமையை ஆற்ற வேண்டும். நீதியை நிலைநாட்டும் வகையில் பணியாற்ற வேண்டும். ஆனால்,அரசியல் தலையீடு மற்றும் சமூகத்தில் உள்ள மிகப்பெரிய நபர்கள் தொடர்பான வழக்குகளில், சிபிஐ அதிகாரிகள் முறையாக விசாரணை நடத்துவதில்லை என்பதுயதார்த்தமான உண்மையாகவே உள்ளது. இது அடிக்கடி நடப்பதில்லை என்றாலும், அரசியல் தலையீடு இல்லாத வழக்குகளில் சிபிஐ சிறப்பாக செயல்படுவதை நன்றாகவே பார்க்க முடிகிறது.சிபிஐ-யின் முக்கியமான அம்சங்களை அரசாங்கத்தின் ஒட்டுமொத்த நிர்வாக கட்டுப்பாட்டிலிருந்து விலக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கம்ப்ரோலர் - ஆடிட்டர் ஜெனரலுக்கு (சிஏஜி) வழங்கப்பட்ட சட்டத்திற்கு இணையாக சிபிஐ-க்கும் சட்ட ரீதியான அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். சிபிஐ-யின் சட்ட ஆணையை வலுப்படுத்த வேண்டும்.அவ்வாறு இல்லாத பட்சத்தில், அதுசிபிஐ மீதான நம்பிக்கையையும், அதன் கட்டமைப்பையும் பாதித்து விடும். சிபிஐ விசாரணையில் உள்ள குறைபாடுகள்தான், வழக்குகளில் சரியான தீர்ப்பும் கிடைக்காமல் போவதற்கும் காரணமாகி விடுகின்றன.இவ்வாறு ரஞ்சன் கோகோய் பேசியுள்ளார்.

;