tamilnadu

img

பீகாரில் இடதுசாரிகள் 29 இடங்களில் போட்டி... ஆர்ஜேடி கூட்டணியில் தொகுதி உடன்பாடு

புதுதில்லி:
பீகாரில், ஆர்ஜேடி தலைமை யிலான மெகா கூட்டணியின் ஒரு பகுதியாக இடதுசாரி கட்சிகள் 29 இடங்களில் போட்டியிட உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியில் இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஹன்னன் முல்லா தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 இடங்களிலும், சிபிஐ-எம்எல் (விடுதலை) 19 இடங்களிலும் போட்டியிடுகின்றன.கடந்த முறை தனித்தனியாக போட்டியிட்ட இடதுசாரி கூட்டணி மூன்று இடங்களை வென்றது.

தற்போதைய தேர்தலில் சிபிஎம் வேட்பாளர்களாக ராம்தேவ் ராய் (தர்பங்கா ஆசிரியர் தொகுதி), அஞ்சனி குமார் (தர்பங்கா பட்டதாரி தொகுதி) அறிவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு இடங்களுக்கு வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளனர்.ஆர்ஜேடி 144 இடங்களுக்கும், காங்கிரஸ் 70 இடங்களுக்கும் போட்டியிடுகின்றன. மகேஷ் சஹானி தலைமையிலான விகாஸ் ஷீல் இன்சான் கட்சிக்கு ஆர்ஜேடி ஒரு சில இடங்களை வழங்கும். மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட பீகாரில், முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. பாஜக கூட்டணியில் தொகுதி பகிர்வு இழுபறி தொடர்கிறது.