tamilnadu

img

புதுச்சேரியில் ஒரு மாதத்தில் 10,000 பேருக்கு தொற்று பரவும்...

புதுச்சேரி:
புதுச்சேரியில் புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவர், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என 3 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கையும் ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச் சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறியதாவது:“புதுச்சேரி மாநிலத்தில் 775 பேருக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 113 பேர், காரைக்காலில் 3 பேர், ஏனாமில் 23 பேர் என மொத்தம் 139 பேருக்கு (17.9 சதவீதம்) தொற்று இருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. இதில் 72 பேர் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், 40 பேர் ஜிப்மரிலும், ஒருவர் ‘கோவிட் கேர் சென்ட’ரிலும், காரைக்காலில் 3 பேரும், ஏனாமில் 23 பேரும் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 2,654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒருவர், ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்க 38 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 514 பேர், ஜிப்மரில் 288 பேர், ‘கோவிட் கேர் சென்ட’ரில் 150 பேர், காரைக்காலில் 42 பேர், ஏனாமில் 59 பேர், மாஹேவில் 2 பேர் என மாநிலத்தில் மொத்தம் 1,055 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இன்று கதிர்காமம் மருத்துவக் கல்லூரியில் 32 பேர், ஜிப்மரில் 19 பேர், ‘கோவிட் கேர் சென்ட’ரில் 14 பேர், காரைக்காலில் 13 பேர் என மொத்தம் 78 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,561 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 34 ஆயிரத்து 305 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 31 ஆயிரத்து 142 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று வந்துள்ளது. இன்னும் 353 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன.அடுத்த 35 நாட்களுக்கு 10 ஆயிரம் பேருக்குத் தொற்று பரவ வாய்ப்புள்ளது என்று ஜிப்மர் இயக்குநர், நம்முடைய மருத்துவக் குழுவினர் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக முதல்வரிடம் பேசியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

;