tamilnadu

img

பாஜகவை பிடிக்காவிட்டால் வேறு கட்சியை ஆதரியுங்கள்! நிதின் கட்காரியே சொல்லி விட்டார்

புதுதில்லி, ஏப்.7-

கடந்த 5 ஆண்டு கால பாஜக ஆட்சியைமக்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தே வாக்களிக்க வேண்டும் என்று நிதின் கட்காரிகேட்டுக் கொண்டுள்ளார். பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்காரி என்.டி.டி.வி.க்கு மனந்திறந்த பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில்தான் இவ்வாறு கூறியுள்ளார். “இந்த தேர்தல் எங்களின் 5 ஆண்டு கால ஆட்சிக்கான ஒரு சோதனையாகும். இந்தகாலத்தில் ஒரு ஆளும் கட்சி எப்படி செயல்பட்டுள்ளது என்பது மதிப்பிடப்பட வேண்டும். நாங்கள் சரியாக செயல்படவில்லை என மக்கள் நினைத்தால் அவர்கள் தாராளமாக வேறு ஒரு கட்சிக்கு வாக்களிக்கலாம். அரசியல் என்பது அதிகாரத்திற்கு வருவதற்கானது என நான் கருதவில்லை. அரசியல் சமூகத்திற்கானது” என்று கட்காரி கூறியுள்ளார்.“கடந்த ஐந்து ஆண்டுகளில் நடைபெற்ற பாஜக ஆட்சி வெறும் ட்ரெய்லர் மட்டுமே. மக்கள் இன்னும் முழு படத்தையும் பார்க்கவில்லை” என்றும் நாட்டு மக்களை கட்காரி பயமுறுத்தியுள்ளார்.

;