tamilnadu

img

எவ்வளவு மோசடிகளைத் தான் பாஜக செய்யும்? மோடி 85 லட்சம் சவுகிதார்களை சந்தித்ததும் பொய்தானாம்...

புதுதில்லி, ஏப்.15-நாட்டுக்கு நாங்கள்தான் காவலாளி என்று கூறி, பிரதமர் மோடியில் இருந்து அவரது கட்சியினர்அனைவரும், பெயருக்கு முன்னதாக ‘சவுக்கிதார்’ (காவலாளி) என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், “பாஜக-வினர் காவலாளிகள் கிடையாது; அவர்கள்திருடர்கள்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார். “பாஜகவினரால் நாட்டையும், ஏழை மக்களையும் காப்பாற்ற முடியவில்லை. பணக்காரர்களுக்குத்தான் மோடி காவலாளியாக இருக்கிறார்” என்றும் ராகுல் சாடி வருகிறார்.இதனிடையே, பிரதமர் மோடி, நாட்டில் இருக்கும் 25 லட்சம் காவலாளிகளுடன் ஆடியோ மூலம் தொடர்பு கொண்டார் என்றும், இந்தக் கூட்டத்திற்கு பாஜகஎம்.பி., சின்ஹா ஏற்பாடு செய்திருந்தார் என்றும் ஒரு செய்தி, அண்மையில் ஊடகங்களில் பரப்பப்பட்டது.அதாவது, கேப்சியில் (தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் மத்தியக் கழகம்) பதிவு செய்து, 22 ஆயிரம் நிறுவனங்களில் பணிபுரியும் 85 லட்சம் தனியார் காவலாளிகள் மோடியுடன் நடந்த ஆடியோ உரையாடலில் கலந்துகொண்டனர் என்று கூறியிருந்தனர்.


அவர்களுடன் உரையாடும் போது “நானும் ஒரு காவலாளி” என்று பிரதமர் மோடி கூறியதாகவும், அதைக்கேட்டு தனியார் நிறுவன காவலாளிகள் நெக்குருகி போய்விட்டதாகவும் கதை விட்டிருந்தனர்.ஆனால் தற்போது அது உண்மையில்லை என்பது தெரியவந்துள்ளது. இதை கேப்சி என்ற அந்த நிறுவனமே போட்டு உடைத்துள்ளது. இதுதொடர்பாக கேப்சி கழகத்தின் தலைவர் குன்வர் விக்ரம்சிங், பிரதமருக்கே மார்ச் 29-ஆம்தேதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், “பிரதமரின் பேச்சைக்கேட்க தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் காவலர்கள் ஆர்வத் துடன் காத்திருந்தனர்; ஆனால், இறுதியில் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்; எங்களுக்கு தெரிவிக்கப்பட்டதுபோல், நீங்கள்ஆடியோ பிரிட்ஜில் தொடர்பு கொள்ளாமல், பேஸ்புக் வாயிலாக 500 காவலர்களுடன் மட்டும் தொடர்பு கொண்டது தெரிய வந்தது; இதனால், காவலர்கள் ஏமாற்றம் அடைந்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், மோடியோடு உரையாடுவதற்கான “இணைப்பை ஆர்.கே. சின்ஹாவின் மகன் ரிதுராஜ் சின்ஹாவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு சர்வீசுக்கு மாற்றியிருந்ததும் பின்னர்தான் தங்களுக்கு தெரியவந்தது” என்றும் குன்வர் விக்ரம் சிங், வருத் துத்துடன் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், பிரதமர் மோடி 85 லட்சம் சவுகிதார்களை சந்தித்ததாக கூறப்பட்ட விஷயத்திலும் நடந்துள்ள மோசடி வெளிச்சத் திற்கு வந்துள்ளது.

;