tamilnadu

img

ஊரடங்கு என்ற தாழ்போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு

புதுதில்லி:
கொரோனா ஊரடங்கு குறித்து காங்கிஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தமது  டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தங்கள் சொந்த ஊரில் சொந்த மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டுமென்ற எண்ணத்தை ஊரடங்கு என்ற தாழ்போட்டு எத்தனை நாட்களுக்கு அவர்களை அடைத்து வைத்திருக்க முடியும். புலம்பெயர்ந்த நபர்கள் (மற்றும் அவர்களது குடும்பங்கள்)  மனநிலையும் விருப்பமும் என்னவென்றால், மே 3-ஆம் தேதிக்குப் பிறகு, அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்கள்,கிராமங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்.வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சுகாதாரம், பாதுகாப்பு குறித்த கடுமையான நிபந்தனைகளின் கீழ், மே 3-ஆம் தேதிக்குப் பிறகு, புலம்பெயர்ந்தோர் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல அனுமதிக்கும் ஒரு மனிதாபிமானக் கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

;