tamilnadu

img

கேரளத்தில் கனமழை; எர்ணாகுளத்தில் கடல் கொந்தளிப்பு

கொச்சி:
மகா புயலின் தாக்கத்தால் அரபிக்கடலில் பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் முகாம்களுக்கு மாற்றப்பட்டன. கேரளத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.கொச்சியில் புதனன்று (அக்.30) இரவில் தொடங்கிய மழை காலையிலும் தொடர்ந்து பெய்தது. கடல் கொந்தளிப்பால் எர்ணாகுளம் அருகில் உள்ள ஞாறக்கல், எடவநாடு, பரவூர் பகுதிகளில் கடல்நீர் புகுந்தது. அங்கிருந்த மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். வெள்ளம் புகுந்ததால் ஞாறக்கல்லில் இருந்து சுமார் 50 குடும்பங்கள், தாந்தோணி துருத்தி லிருந்து 62 குடும்பங்கள் முகாமுக்கு மாற்றப்பட்டன. போர்ட் கொச்சி கமாலக்கடலில் ஏற்பட்ட அலையில் சிக்கி பத்துக்கும் மேற்பட்ட படகுகள் தகர்ந்தன.  

ஆரஞ்ச், மஞ்சள் எச்சரிக்கை
எர்ணாகுளம், திரிச்சூர், மலப்புறம், கோழிக்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற பத்து மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கைளும் விடுக்கப்பட்டுள்ளது.மகாபுயலால் மணிக்கு மணிக்கு 26 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசிக்கொண்டிருந்தது. மாலத்தீவி லிருந்து வடக்கே 670 கிலோமீட்டல் தூரத்திலும், லட்சத்தீவு மினிக்கோயிலிருந்து 210 கிலோ மீட்டர் தூரத்திலும் கவரத்தீவிலிருந்து 80 கிலோ தூரத்திலும் திருவனந்தபுரத்திலிருந்து 440 கிலோமீட்டர் தூரத்திலும் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

;