tamilnadu

img

பெண் தயாரிப்பாளருக்கு எதிராக ராணுவத்தினர்....

புதுதில்லி:
இணையதள தொடரில், ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை தவறான முறையில் சித்தரித்து விட்டதாக, பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கு, முன்னாள்ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஏக்தா கபூரின் ‘ஆல்ட் பாலாஜி’ தயாரிப்பு நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர்.ஏராளமான தொலைக் காட்சித் தொடர்களையும், வெப் சீரிஸ்களையும் தயாரித்தவர் பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.‘பத்மஸ்ரீ’ விருது உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்ற இவர்,தற்போது ‘ட்ரிபிள் எக்ஸ்-2’ என்றஇணையதளத் தொடரை தயாரித்துள்ளார். ‘XXX-2’ என்ற அந்தத்தொடரில், ராணுவ வீரர்களின் மனைவியர் பிற நபர்களுடன் தொடர்பில் இருப்பது போல காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்குத்தான் தற்போது எதிர்ப்புஎழுந்துள்ளது.“ராணுவ வீரர்கள் நமதுநாட்டுக்காக தங்கள் உயிரையும்தியாகம் செய்து வருகிறார்கள். ஆனால், ‘ட்ரிபிள் எக்ஸ்-2’ தொடரின் தயாரிப்பாளரும் இயக்குநரும், அவர்களை தவறான முறையில் சித்தரித்துள்ளனர். அந்த காட்சிகளை ஏக்தா கபூர் நீக்கவில்லையென்றால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்”என்று முன்னாள் ராணுவ வீரரும் தியாகிகள் நல அறக்கட்டளையின் தலைவருமான மேஜர் டி.சி. ராவ் கூறியுள்ளார்.

;