tamilnadu

img

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.63 ஆயிரம் கோடி குறைப்பு?

புதுதில்லி:
ஜி.எஸ்.டி. வரி வசூல் குறைந்து விட்டது என்ற காரணத்தைச்சொல்லி, மாநில அரசுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை குறைக்க மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையை ஏற்றுக் கொண்டதன் மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கமத்திய அரசு ஒப்புக் கொண்டுள் ளது. இதன்படி 2019-20ம் ஆண் டிற்கு, ஒரு லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய், மாநிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக வழங் கப்பட வேண்டும்.ஆனால், கடந்த வாரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதித்த மோடி அரசு, மாநில அரசுகளுக்கான இழப்பீட்டை குறைக்கதிட்டமிட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக ஜி.எஸ்.டி. வசூல் குறைந்துவருவதையும், பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்கெனவே பல்வேறு பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டதையும் காரணமாக காட்டி, இந்த வரிக்குறைப்பை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளது.இதன்படி, நடப்பு நிதியாண் டில் மாநில அரசுகளுக்கு அளிக்கவேண்டிய தொகையில் சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குவெட்டப்படும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள் ளன.இதனால் மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கும்அபாயம் ஏற்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, பட்ஜெட் தாக்கல்களின் போது, இந்த நெருக்கடி எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், பேரிடர் காலத்தின் போது நிவாரணம் வழங்குவது, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவது போன்றவற்றிலும் இது சிக்கலை உருவாக்கும் என்று நிதித்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

;