tamilnadu

img

அரசு மருத்துவமனைகளைத் தனியாரிடம் தரும் மோடி அரசு? பாரத் பெட்ரோலியம், ரயில்வே வரிசையில்..

புதுதில்லி:
மத்திய பாஜக அரசானது, அரசு நிறுவனங்களில், தனியார் மயத்தை நேரடியாகப் புகுத்தாமல், ‘அரசுத் திட்டங்களில் தனியார் பங்களிப்பு’ என்ற பெயரில், கொஞ்சம் கொஞ்சமாக அந்த வேலையை செய்து வருகிறது. ரயில்வேதுறை உள்ளிட்ட சில துறைகளில், கணிசமான பணிகள் ஏற்கெனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்தான், அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் விடும் புதியதிட்டம் ஒன்றை கொண்டுவர மோடிஅரசு ஆலோசனையில் இறங்கியுள் ளது. இதற்கான பரிந்துரையை, ‘நிதி அயோக்’ அமைப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.தனியார் மருத்துவக் கல்லூரிகள் செயல்படுவதற்கு பெரிய அளவிலான மருத்துவமனைகள் தேவைப்படுகின்றன. ஆனால் தனியார் கல்லூரிகள்அவ்வளவு பெரிய மருத்துவமனையை நிர்வகிப்பதில் சிக்கல்கள் உள்ளன. அதே நேரத்தில் மாவட்ட அளவில் அரசுசார்பில் ஆங்காங்கே மருத்துவமனைகள் இயங்கி வரும் நிலையில், இந்த மருத்துவமனைகளை குறிப்பிட்ட தனியார் மருத்துவ கல்லூரிகளிடம் ஒப்படைத்து அதை நிர்வகிக்கும் பொறுப்பைவழங்கலாம் என்று ‘நிதி ஆயோக்’ கூறியுள்ளது.
அவ்வாறு தனியாரிடம் விடும் பட்சத்தில், அவர்கள், வழக்கமான இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் அதற்கான படுக்கை வசதிகளை வழங்குவதுடன், கட்டணச் சிகிச்சையை செயல் படுத்துவார்களாம்.இதனை பரிந்துரை என்ற அளவில்ஏற்றுக்கொண்டுள்ள மோடி அரசு, இதுசம்பந்தமாக மாநில அரசுகளுடனும், மருத்துவத் துறை சார்ந்தவர்களுடனும் ஆலோசனை நடத்த முடிவு செய்துள் ளது. இந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி மாத இறுதியில் நடைபெற உள்ளது.அதில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற நடைமுறை, பாஜகஆளும் குஜராத் மற்றும் கர்நாடகாவில் ஏற்கெனவே நடைமுறைக்கு வந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

;