tamilnadu

img

பயங்கரவாதத்திற்கு உதவவே தங்க கடத்தல்... முக்கிய சதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது

கொச்சி:
நாட்டைத் தகர்க்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கே தங்க கடத்தல். அரசுமுறை பார்சல்களில் தங்கத்தை கடத்துவதற்கான முக்கிய சதி ஐக்கிய அரபு அமீரகத்தில்(யுஏஇ) நடந்தது, இது இரு நாடு களுக்கும் இடையிலான உறவுகளை பாதிக்கக்கூடும் என்பதால் இது குறித்தும்விரிவாக விசாரிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ தெரிவித்துள்ளது.

தங்க கடத்தல் வழக்கின் இரண்டாம்குற்றவாளி சொப்னா சுரேஷையும், நான்காம் குற்றவாளி சந்தீப் நாயரையும்திங்களன்று கொச்சி சிறப்பு நீதி மன்றத்தில் என்ஐஏ ஆஜர் படுத்தியது. அப்போது அவர்களை காவலில் எடுத்துவிசாரிப்பதற்காக தாக்கல் செய்த மனுவில் இத்தகவலை என்ஐஏ தெரிவித்து ள்ளது. நகைக்கடைக்காக அல்ல, இவை தீவிரவாத குழுக்களுக்குதான் செல்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.இக்குழு 2019 முதல் தங்கம் கடத்தி வருகிறது. சமீபத்திய காலங்களில் இரண்டு முறை ‘ராஜீய நடவடிக்கை சார்ந்தது’(Diplomotic) என்ற பெயரிலான பார்சல்களில் ஒன்பது கிலோ மற்றும் 18 கிலோ தங்கம் கடத்தப் பட்டுள்ளன. தூதரகத்தின் முத்திரையும்சின்னமும் போலியாக தயாரித்து யுஏஇ-யில் இருந்து தங்கம் அனுப்பப் பட்டுள்ளது. தூதரகத்தின் முத்திரை வைக்கப்பட்டுள்ள பார்சல்கள் சோதனை இல்லாமல் கடந்து செல்கின்றன. இதற்கெல்லாம் மூன்றாவது குற்றம் சாட்டப்பட்ட நபரான பைசல்பரீத் தலைமை தாங்கினார். ஐக்கியஅரபு அமீரகத்தின் தூதரக செயல்பாடு களை உன்னிப்பாக கவனிக்க மட்டுமே சொப்னா இங்கு பணியாற்றினார். தூதரக பொது அலுவலகத்தில் நிர்வாகசெயலாளராக மூன்று ஆண்டுகள் தொடர்ந்தார்.

அனைத்து தங்க கடத்தல் வழக்கு களையும், அதற்கு பின்னணியாக இருந்து செயல்பட்டவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டுவரவே முயற்சி நடக்கிறது. ஏற்கனவே உள்துறை அமைச்சகம் விசாரித்தது.  ‘ராஜீய நடவடிக்கை என்ற பெயரிலான பார்ச லில் தங்கம் கடத்தியது சம்மந்தமாக ஐக்கிய அரபு அமீரகமும் விசாரிக்கிறது எனவும் என்ஐஏ தெரிவித்திருந்தது. அப்போது தங்க கடத்தலை தீவிரவாத கும்பலுடன் தொடர்பு படுத்துவது எப்படி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.கிருஷ்ணகுமார் என்ஐஏ வழக்கறிஞரி டம் கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்தே இந்த விளக்கத்தை என்ஐஏ அளித்துள்ளது.

ஜூலை 21 வரை என்ஐஏ காவல்
விசாரணை முடிவில் சொப்னாவை யும் சந்தீப்பையும் இம்மாதம் 21 ஆம் தேதி வரை தங்களது காவலில் வைக்க என்ஐஏவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இனி விரிவான விசாரணையும் சாட்சியம் சேகரிப்பும் நடைபெறும்.திங்களன்று பிற்பகல் 3 மணியளவில் சொப்னாவும், 4 மணியளவில் சந்தீப்பும் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். பின்னர் இருவரும் கடவந்த்ராவில் உள்ள என்ஐஏ  தலைமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.இதனிடையே இந்த வழக்கில் சுங்கத்துறை கைது செய்த மற்றொரு குற்றவாளி ரமீஸ் பொருளாதார குற்றங் களை விசாரிக்கும் தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

;