tamilnadu

img

‘அவுட் கோயிங் சர் ஜி’தான் பொருத்தமான அடைமொழி சத்ருகன் சின்கா கிண்டல்

 மும்பை, ஏப். 3 - பிரதமர் மோடி தனது பெயருக்கு முன்னால், காவலாளி எனப் பொருள்படும் ‘சவுகிதார்’ என்ற வார்த்தையைச் சேர்த்துக் கொண்டுள்ளார். அவரைப் பின்பற்றி, பாஜக-வினரும் ‘சவுகிதார்’ வேஷத்திற்கு மாறியிருக்கின்றனர். ஆனால், இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக கிண்டலடித்து வருகின்றன.இந்நிலையில், தற்போதைய பாஜக எம்.பி.யும், விரைவில் காங்கிரசில் இணைய இருப்பவருமான சத்ருகன் சின்காவும், தன்பங்குக்கு சவுகிதாரை வாரியுள்ளார். சவுகிதார் அடைமொழி மோடிக்குப் பொருத்தமாக இல்லை; ‘அவுட்கோயிங் சர்ஜி’-தான் அவருக்கு பொருத்தம் என்றுகுறிப்பிட்டுள்ளார். அதாவது ஆட்சியை விட்டு வெளியேறப் போகிறவர்என்று மோடியை அவர் கூறியுள்ளார்.“மாண்புமிகு அவுட் கோயிங் சர்ஜி நீங்கள் ஏன் பணம் கொடுத்து சில சேனல்களை விலைக்கு வாங்கி பணத்தை விரயம் செய்கிறீர்கள்? உருவாக்கப்பட்ட அந்த கூட்டம் தேவையா? அவர்கள் எப்போது வேண்டுமானாலும் உங்கள் பெயரைகோஷம் போடுவார்கள், நீங்கள் பேசும்போது, பேசிய பிறகு பேசுவதற்கு முன் உங்கள் கூட்டம் ஏற்பாடுசெய்பவர்களின் செய்கைக்கு ஏற்ப கோஷம் எழுவது சகஜம்தானே. உங்கள் ஜோடனைப் பேச்சுகளில் ஒன்றும் இல்லை. ஆழமும் இல்லைஉள்ளடக்கமும் இல்லை; அதற்குப்பதில் உண்மையான செய்தியாளர்களை எதிர்கொள்ளுங்கள். தேச நலன்களுக்காக அவர்கள் கேள்வி கேட்பார்கள், அதற்குப் பதில் சொல்லுங்கள்” என்றும் சத்ருகன் சின்கா விளாசியுள்ளார்.

;