tamilnadu

img

ஜிடிபி குறைகிறது; பங்குச் சந்தை சரிகிறது; ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைகிறது... இவர்களுக்கு மட்டும் ஒரு குறையுமில்லை...

புதுதில்லி:
2019ஆம் ஆண்டின் ஜூலை மாதம் வரையிலான முதல் 7 மாதகாலத்தில் மும்பை பங்குச்சந்தை சுமார் 6.07 லட்சம்கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த காலகட்டத்தில் ‘சென்செக்ஸ்’ வரலாறு காணாத உயர்வையும் சந்தித்து,அடுத்த சில நாட்களிலேயே 17 ஆண்டுகளில் ஏற்படாத சரிவையும் சந்தித்து விட்டது. டாலருக்கு இணையான இந்தியாவின் ரூபாய் மதிப்பு, கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.நாட்டின் முக்கியமான 8 கட்டமைப்புத் துறைகள், தொடர்ந்து 50 மாதங்களாக நஷ்டம் அடைந்து வருகின்றன. இந்தியாவின் ஜிடிபி 7 சதவிகிதத்தை தாண்டுவதே கஷ்டம் என்று சர்வதேச ஆய்வு நிறுவனங்கள் கணிப்பு வெளியிட்டுள்ளன. 

வரும் ஆண்டுகளில் மோசமான பொருளாதாரச் சிக்கலில் இந்தியா சிக்கப் போகிறது என்று பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழுவில் இடம் பெற்றுள்ள ரதின் ராய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இவ்வாறு, இந்திய நாடு மிகப்பெரிய நெருக்கடிகளைச் சந்தித்து வரும் இந்தசூழலில்தான், இந்தியாவின் பெரும்பணக்காரர்கள் மட்டும் மிகப்பெரிய அளவிற்கு லாபத்தை அள்ளிக் குவித்திருப்பதாக ‘ப்ளூம்பெர்க் பில்லியனர் இன்டெக்ஸ்’ நிறுவனத் தரவுகள் கூறியுள்ளன.டாப் 10 பணக்காரர்களில் 5 பேர்மிகப்பெரிய அளவில் சம்பாதித்துள்ளனர். இதில் 4 பேர் சுமார் 7000 கோடி ரூபாய்க்குமேல் சம்பாதித்துச் சொத்து சேர்த்துள்ளனர் என ‘ப்ளூம்பெர்க்’ தெரிவித்துள்ளது.விப்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அசிம் பிரேம்ஜி-யின் சொத்து மதிப்பு இந்த வருடத்தில் மட்டும் சுமார் 3.06 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. அவர் ‘டாப் 10’ பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அசிம் பிரேம்ஜி அவர்களின் சொத்து மதிப்பு ஒட்டுமொத்தமாக 20.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. விப்ரோ நிறுவனத்தின் பங்கு மதிப்பும் சுமார் 6 சதவிகிதம் வரைஉயர்ந்துள்ளது.

ரிலையன்ஸ் சாம்ராஜியத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்புஇந்த 7 மாத காலத்தில் 2.94 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு 47.3 பில்லியன்டாலராக உயர்ந்துள்ளது. ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனப் பங்குகளின் மதிப்பும் இந்த 7 மாத காலத்தில் 2 சதவிகிதம் உயர்ந்துள்ளது.நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான உதய் கோட்டாக்-இன் சொத்து மதிப்பு 2019ஆம் ஆண்டில் முதல் 7 மாதத்தில் 1.96 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்து, மொத்த சொத்து மதிப்பு13.4 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.கோட்டாக் மஹிந்திரா வங்கி பங்குகளின் மதிப்பு 19 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது.இதேபோல, கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 1.11 பில்லியன் டாலரும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தின் தலைவர் பீனுகோபால் பங்கூரின் சொத்துமதிப்பு 0.88 பில்லியன் டாலரும், எச்.சி.எல். தலைவர் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 0.84 பில்லியன் டாலரும் உயர்ந்துள்ளது. ‘ஏர்டெல்’ சுனில் மிட்டல் சொத்து மதிப்பு511 மில்லியன் டாலரும், பஜாஜ் குரூப்தலைவர் ராகுல் பஜாஜ்-இன் சொத்து மதிப்பு 73 பில்லியன் டாலரும் உயர்ந்துள்ளது.

;