புதுதில்லி:
தெற்காசிய நாடுகளில் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது.
ஆனால், அண்மைக் காலமாக, கல்வி, வேலைவாய்ப்பு, உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி, பாலின சமத்துவம் என அனைத்து விதமான சமூக - பொருளாதாரக் குறியீடுகளிலும், அண்டை நாடான வங்கதேசம் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி முன்னேறி வருகிறது.2016 முதல் 2018 வரையிலான காலகட்டத்திலான, ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்ததரவுகளை, ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) கடந்த 2019 அக்டோபரில் வெளியிட்டது. இது கொரோனாவுக்கு முந்தைய காலம். அப்போதே, உள்நாட்டு உற் பத்தி வளர்ச்சியில் இந்தியாவை, வங்கதேசம் பின்னுக்குத் தள்ளியது. சராசரியாக 7.1 சதவிகிதம் என்பதிலிருந்து 7.9 சதவிகிதமாக அந்நாட்டின்பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து இருந்தது. அதன்பிறகும் வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொண்டது.ஆனால், இந்தியாவின் ஜிடிபிவளர்ச்சி அதே 2016-18 காலகட்டத் தில் 7.2 சதவிகிதத்தில் இருந்து 6.5 சதவிகிதத்திற்கு குறைந்து போனது.2019-20 நிதியாண்டில் ஒரேயடியாக வீழ்ச்சியடைந்து மைனஸூக்குப் போனது.
2021 மார்ச் மாதம், உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை (UN World Happiness Report 2021)ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் செயல்படும் ‘ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் அமைப்பு’ (UN Sustainable Development Solutions Network) என்ற அமைப்பு வெளியிட்டது. 2000-ஆவது ஆண்டிற்கான இந்த பட்டியலில், இந்தியாவுக்கு கிடைத்த இடம் 139. ஆனால்,இந்தப் பட்டியலிலும் 101-ஆவது இடத்தைப் பிடித்து, இந்தியாவை வங்கதேசம் முந்தியது. பாகிஸ்தான்கூட 105-ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
இதேபோல பொருளாதார பங் கேற்பு மற்றும் வாய்ப்பு, கல்வி பெறுதல், சுகாதாரம் மற்றும் வாழ்தல், அரசியல் அதிகாரம் ஆகியவற்றில் நிலவும் ஆண் - பெண் பாலின இடைவெளி தொடர்பாக ஆய்வு செய்து, உலக பொருளாதார மன்றம் (WorldEconomic Forum), 2021-ஆண்டிற்கான உலகளாவிய பாலின இடைவெளி பட்டியலை (Global GenderGap index) 2021 ஏப்ரலில் வெளியிட்டது. இதில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 156 நாடுகளில் இந்தியாவுக்கு கிடைத்ததோ 140-ஆவதுஇடம்தான். ஆனால், வங்கதேசம் பெற்றது 65-ஆவது இடம். பெண் களின் வருவாய் விஷயத்தில் உலகின் கடைசி 10 நாடுகளில் ஒன்றாகஇந்தியா உள்ளது என்று அப்போதேசுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில்தான், தனிநபர் வருமானத்திலும் இந்தியாவைப் பின்னுக்குத் தள்ளி, வங்கதேசம் முன்னேறியுள்ளது.வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 2019-20ஆம் நிதியாண்டில் 2,064 டாலராக இருந்த நிலையில், அது கடந்த ஓராண்டில் 9 சதவிகிதம்வளர்ச்சி அடைந்து 2,227 டாலராகஉயர்ந்துள்ளது. இதே காலகட்டத் தில், இந்தியாவின் தனிநபர் வருமானம் மோசமாக வீழ்ச்சி அடைந்து,1,947.417 டாலராக குறைந்துள்ளது.கடந்த ஆண்டு அக்டோபரில் சர்வதேச நாணய நிதியம் தனது உலக பொருளாதார கண்ணோட்டத்தை வெளியிட்டது, அப்போதே 2020-ஆவது ஆண்டில் டாலர் அடிப்படையில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இந்தியாவை வங்கதேசம் விஞ்சிவிடும் என்று கணித்திருந்தது. அது தற்போது நடந்துள் ளது. நாட்டின் தேசிய வருமானத்தை அதன் மக்கள்தொகையால் வகுப்பதன் மூலமே தனிநபர் வருமானம்கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், வங்கதேச குடிமக்கள், புள்ளி விவர தரவுகளின் அடிப்படையில், இந்திய குடிமக்களை விட செல் வந்தர்களாக மாறியுள்ளனர்.
2007-ஆம் ஆண்டில், வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவின் தனிநபர் வருமானத்தில் பாதிதான் என்பது இங்கு குறிப்பிடத்தக் கது.‘வங்கதேசத்தைச் சேர்ந்த ஏழைகள், தங்கள் நாட்டில் 3 வேளை உணவு கிடைக்காததால் இந்தியாவிற்குள் ஊடுருவுகின்றனர்’ என்று,மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மத்திய உள்துறை அமைச் சர் அமித் ஷா பேசியிருந்தார். இதற்கு, வங்கதேசத்தைப் பற்றிய அமித்ஷாவின் அறிவு மிகக்குறுகியது. ஏனெனில், வங்கதேசத்தில் இப்போது யாரும் பசியால் இறக்கவில்லை. ‘மோங்கா’ (பருவகால வறுமை மற்றும் பசி) கூட இல்லை. வேலைவாய்ப்பு மற்றும்மக்களுக்கான கழிப்பறை வசதி உள்ளிட்ட பல சமூக குறியீடுகளில் இந்தியாவை விட வங்கதேசம் முன்னணியில் உள்ளது என்று வங்கதேச வெளியுறவுத் துறை அமைச்சர்ஏ.கே. அப்துல் மோமன் பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.