tamilnadu

img

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி காலமானார் 

ராய்ப்பூர்
நாட்டின் கிழக்கு பகுதி மாநிலமான சத்தீஸ்கர் பிரிக்கப்பட்ட பொழுது காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத்தின் முதல், முதல்வராக இருந்தவர் அஜித் ஜோகி (74). 

இவருக்கு கடந்த கடந்த 9-ஆம்தேதி நெஞ்சுவலி ஏற்பட ராய்ப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக தான் உள்ளதாக மருத்துவர்கள் அறிவித்திருந்த  நிலையில், இன்று பிற்பகல் காலமானதாக அவரது மகன் அறிவித்தார். 

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான அஜித் ஜோகி 1980 பேட்சில் பணியாற்றியவர். பின்னர் ராஜீவ் காந்தி மூலம் அரசியலில் காலடி வைத்து காங்கிரஸ் கட்சியின் பழங்குடி இன தலைவர்களில் ஒருவராக வலம் வந்தார். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ., எம்.பியாக பல முறை பதவி வகித்தவர். ராஜ்யசபா எம்.பி.யாகவும் இருந்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் பிரிக்கப்பட்ட பொழுது அம்மாநிலத்தின் முதல் முதல்வராக (2000 - 2003) பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு.  

காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட கசப்பு உணர்வு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் (ஜெ) தனி கட்சியை 2016-இல் தொடங்கினார். சத்தீஸ்கர் மாநிலத்தின் அரசியலில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் பிரபல தலைவராக இருந்த அஜித் ஜோகியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

;