tamilnadu

img

யூ டியூப்பில் பதிவிடுவதற்காக ‘பேய்’ வேடமிட்டு மக்களை அச்சுறுத்திய 7 பேர் கைது

பெங்களுரூ:
யூ டியூப்பில் பதிவிடுவதற்காக பேய் போல வேடமிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய பெங்களூரைச் சேர்ந்த 7 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப் பட்டனர்.சமூக வலைத்தளமான யூ டியூப்பில் பதிவிடுவதற்காக பேய் போல வேடமிட்டு மக்களை அச்சுறுத்தும் பிராங்க் வீடியோ எடுக்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் நவம்பர் 11 அன்று அதிகாலையில் பெங்களூரைச் சேர்ந்த 7 இளைஞர்கள், முன்பின் தெரியாத நபர்களை  வீடியோ எடுப்பதன் பேரில் அச்சுறுத்தியதால் கைது செய்யப்பட்டுள்ள னர்.பெங்களூர் வடமேற்குப் பகுதியில் உள்ள யஷ்வந்த்பூர், ஷரீஃப் நகரில் இந்த இளைஞர்கள், கடந்து செல்லும் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிராங்க் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த, ஷான் மாலிக்(20), நவீத்(20), சஜீல் முகமது(21), சாகிப்(20), சயத் நபீல்(20), யூசுப் அஹமத்(20), முகமது அயூப்(20) ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற வீடியோக்களை எடுக்கக்கூடாது என்று  காவல்துறை அதிகாரி மாணவர்களை எச்சரித்தார். ‘இனி பிராங்க் வீடியோ எடுக்கமாட்டோம்’ என குற்றம்சாட்டப்பட்டவர்கள் உறுதிமொழி அளித்தனர்.இதன்பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

;