tamilnadu

img

முதல் ரபேல் விமானம் அடுத்த மாதம் ‘டெலிவரி’

புதுதில்லி:
பிரான்ஸ் நாட்டின் ‘டஸ்ஸால்ட் ஏவியேஷன்’ நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ. 62 ஆயிரம் கோடி மதிப்பில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக கடந்த 2016 செப்டம்பர் மாதம் மோடி அரசு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதில், அனில் அம்பானிக்கு பெரும் தொகை கைமாற்றிவிடப்பட்டதாகவும், மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு வைத்தன. இதற்கான ஆதாரங்களும் வெளியாகின. எனினும், தனது அதிகார பலத்தால், அந்த ஊழலை அப்படியே மோடி அரசு அமுக்கிவிட்டது.இந்நிலையில், ஒப்பந்தத்தின்படி முதலாவது ரபேல் போர்விமானம் செப்டம்பர் மாதம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இதற்காக அடுத்த மாதம் விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவாவுடன், பிரான்ஸ்செல்ல இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.பிரான்ஸ் நாட்டின் போர்டியக்ஸ் நகரிலுள்ள ரபேல் விமானத் தயாரிப்புத் தொழிற்சாலையில் செப்டம்பர் 20-ஆம் தேதி நடக்கும் நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் டஸ்ஸால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள், இந்தியாவிடம் முதல் ரபேல் விமானத்தை ஒப்படைக்கின்றனர்.

;