tamilnadu

img

பிஎஸ்என்எல்க்கு 4 ஜி உரிமம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.
தலைநகர் தில்லியில் இன்று மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டல் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது,
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் மற்றும்  எம்டிஎன்எல் நிறுவனங்களை மூடப்போவதாக வரும் செய்திகளில் உண்மை கிடையாது. அதேபோல் இந்த இரண்டு நிறுவனங்களில் இருந்து அரசின் பங்குகளை விலக்கிக் கொள்ளப் போவதோ அல்லது ஏதேனும் ஒரு மூன்றாம் நிறுவனத்திற்கு  குத்தகைக்கு விடப்போவதோ  இல்லை.
மாற்றாக பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்படும். பிஎஸ்என்எல்-லில் இருந்து விருப்ப ஓய்வு பெறுவோருக்கு சிறப்பு ஓய்வூதிய தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.