tamilnadu

img

‘மத்திய பட்ஜெட் கிராமப்புற மக்களை முழுமையாக ஒதுக்கிவிட்டது’

புதுதில்லி, பிப்.5 - மத்திய பட்ஜெட், ஒரு கார்ப்பரேட் ஆதரவு மற்றும் மக்கள்  விரோத பட்ஜெட்டாகும். இது கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சமூகரீதி யாகவும் பொருளாதார ரீதியாக வும் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப் பட்டுள்ள மக்களின் நலன்கள் குறித்துக் கிஞ்சிற்றும் கவலைப்பட வில்லை என்றும் அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் கூறி யுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் தலைவர் ஏ.விஜயராகவன், பொதுச் செயலாளர் பி.வெங்கட் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: விவசாய நெருக்கடியாலும், பொருளாதார நெருக்கடியாலும்  கடுமையாகப் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ள மக்கள் குறித்து கவலையே படவில்லை. மாறாக, நிதி மூல தனத்தின் நலன்களைத் தூக்கிப் பிடிக்கும் விதத்திலும், பொதுத்துறை நிறுவனங்களை, குறிப்பாக எல்ஐசியை தனியாரு க்குத் தாரைவார்க்கும் விதத்திலும் அமைந்திருக்கிறது.   பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கும் ‘வேளாண் வணிகம்’ என்பது கிராமப் புற விவசாயத் தொழிலாளர்களை மேலும் சுரண்டுவதற்கே இட்டுச் செல்லும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 13.3 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 2019-20இல் 71,001 கோடி  ரூபாயாக இருந்தது, 2019-20  திருத்திய மதிப்பீட்டில் 61,500 கோடி ரூபாயாகக் குறைந்திருக் கிறது. இவ்வாறு 13.3 சதவீதம் – 9501 கோடி ரூபாய் வெட்டப் பட்டிருக்கிறது. உணவு மற்றும் பொது விநியோ கத்துறைக்கான ஒதுக்கீடும் கடுமையாக வெட்டப்பட்டிருக் கிறது. 2019-20இல் 1,92,249 கோடி ரூபாயாக இருந்தது, தற்போது 2020-21இல் 1,22,235 கோடி ரூபாயாகக்  குறைந்துள்ளது. உணவு மானி யங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடும் பெருமளவில் 41 சதவீத அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. தலித்/பழங்குடியினர், சிறு பான்மையினர், பெண்களுக்கான திட்டங்கள் எதற்கும் ஒதுக்கீடுகளில் உயர்வு இல்லை. சமூகநீதி மற்றும்  மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு பட்ஜெட் ஒதுக்கீடு 1029.61 கோடி ரூபாயிலிருந்து 941 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. தலித் மாணவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்கான (ஃபெல்லோஷிப்) தொகைகளும் சென்ற பட்ஜெட்டில் 360 கோடி ரூபாயாக இருந்தது, இப்போது 300 கோடி ரூபாயாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

விவசாயத் தொழிலாளர்கள், வீட்டுமனைப்பட்டா, கல்விச் செல வினங்களில் மானியம், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த மாண வர்களுக்கு கல்வி உதவித்தொகை, பொது சுகாதார உதவிகள் கோரி வந்தனர். மேலும் பொது விநியோக முறைக்கும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கோரி வந்தார்கள். ஆனால், கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் இக்கோரிக்கைகள் குறித்து பட்ஜெட் எதுவுமே கூறவில்லை. ஒட்டுமொத்தத்தில் இது  ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்டா கும். இது மக்களின் துன்ப துயரங் களை மேலும் அதிகரித்திடவே இட்டுச்செல்லும். எனவே இந்த பட்ஜெட்டுக்கு எதிராக அனைத்துத் தரப்பு மக்களும் ஒன்றுபட்டுப் போராட முன்வர வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறோம். (ந.நி.)

;