tamilnadu

img

மோடி அரசின் தோல்விகள் ஹார்வர்ட் ஆய்வுப் பாடமாகும்...

புதுதில்லி:
மோடி அரசின் கொரோனா தொற்று பரவல் தடுப்பு, ஜிஎஸ்டிஅமலாக்கம், பண மதிப்பு நீக்கத்தோல்விகள், ஹார்வர்ட் பல்கலைக் கழக மாணவர்களுக்கான எதிர்கால ஆய்வுப் பாடமாக வைக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக கூறியுள்ளார்.

“தோல்விகள் நேர்வு பற்றிய எதிர்கால ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூல்ஆய்வுகள்: 1. கோவிட்-19, 2. பணமதிப்பு நீக்கம், 3. ஜிஎஸ்டி அமலாக்கம்” என்று ராகுல் காந்தி தனதுடுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக 3-ஆவது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ள நிலையில், முன்புகொரோனாவுக்கு எதிராக கையைத்தட்டுங்கள், பாத்திரங்களின் மூலம்ஒலி எழுப்புங்கள், விளக்கேற்றுங் கள் என்று கூறிய பிரதமர் மோடியின்வீடியோ, அதேபோல “மகாபாரத போர் 18 நாட்கள் நடைபெற்றது என்றால்; கொரோனா தொற்றுக்கு எதிரான போரை 21 நாட்களில் வெல் வோம்” என்று மோடி ஜம்பம் அடித்தவீடியோ ஆகியவற்றையும் ராகுல் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

;