tamilnadu

img

அங்கி தாஸின் மத வெறுப்புக்கு முகநூல் ஊழியர்களும் எதிர்ப்பு... பல்வேறு தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் தர கோரிக்கை

புதுதில்லி:
இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பகுதிகளுக்கான பொதுக் கொள்கை இயக்குநராக இருப்பவர் அங்கி தாஸ்.

இவர், ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட இந்துத்துவ சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டார்; அவர்களின் மத அடிப்படையிலான வெறுப்புப் பிரச்சாரத்திற்கு துணைபோனார் என்பதை அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகைகடந்த வாரம் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகதலைவர்களுடன் அங்கிதாஸூக்கு இருக்கும் நெருக் கமும் வெளிச்சத்திற்கு வந்தது.

இது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முகநூல் நிறுவனத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கிஇருக்கும் அங்கி தாஸ் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முகநூல் ஊழியர்கள் மத்தியிலும் கோரிக்கை எழுந்துள்ளது. அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக ஒருவிரிவான கடிதத்தை முகநூல்நிறுவனத்திற்கு எழுதியுள்ளனர்.அங்கி தாஸ் தலைமையில் செயல்படும் முகநூல்நிறுவனத்தின் இந்தியக் குழு- முஸ்லிம் விரோதப் போக்குகளுக்கு ஊக்கமளித்தது தொடர்பாக, சில கடினமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றுஅந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளனர்.மேலும், முகநூல் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு கொள்கை வகுப்பு குழுவில், பலதரப்புப் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமென்றும், முஸ்லிம் மத விரோதப் போக்கை கைவிட்டு, அதிகளவிலான கொள்கை நிலைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.மொத்தம் 11 ஊழியர்கள் இணைந்து, முகநூல் நிறுவன தலைமைக்கு, இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர்.

;