tamilnadu

img

ஆங்கில இதழியல் பாடத்திட்டம் ஆர்எஸ்எஸ்-சிற்கு எதிராக உள்ளதாம்...

புதுதில்லி:
தில்லிப் பல்கலைக்கழகத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆங்கில இதழியல் பாடத்திட்டம், ஆர்எஸ்எஸ்-எதிர்ப்பு தன்மை கொண்டதாக இருக்கிறது என்று கூக்குரல் எழுந்துள்ளது.தில்லிப் பல்கலைக் கழகஅகாடமிக் கவுன்சில் உறுப்பின ராக இருப்பவர் ராசல் சிங். இவர்,பல்கலைக்கழகத்தில் மேம்படுத்தப்பட்டு புதிதாக அறிமுகப் படுத்தப்பட்டுள்ள ஆங்கில இதழியல் பாடத்திட்டத்திற்கு (Syllabus of English Journalism), எதிர்ப்பு தெரிவித்து, அகாடமிக் கவுன்சில் கூட்டத்தில் பேசியுள்ளார்.“உத்தரப்பிரதேச மாநிலம்முசாபர் நகரில் முஸ்லிம் களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், அங்கே குண்டர்கள், சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்து க்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய வெறியாட்டம் போன்ற சம்பவங்கள் ஆங்கில இதழியல் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. இவை ஆர் எஸ்எஸ் இயக்கம் மற்றும் அதன் கீழ் இயங்கும் அமைப்புகள் குறித்து மோசமான சித்தி ரத்தைத் தீட்டும் விதத்தில் இருக் கின்றன. மேலும் இவ்வாறு கூறப்பட்டுள்ள செய்திகள் அனைத்தும் ஆர்எஸ்எஸ்-க்கு எதிராக இயங்கும் ஊடகங்களில் வந்தவை. அரசாங்கத்தையும் பிரதமரையும் விமர்சனத்திற்கு உட்படுத்துபவை. எனவே இத னை நீக்கிட வேண்டும்” என்று ராசல் சிங் கூறியிருக்கிறார்.ஆனால், ஆங்கிலத்துறைத் தலைவர், பேராசிரியர் ராஜ்குமார், இதனை ஏற்றுக்கொள்ள வில்லை. “தங்கள் துறையானது எந்த மதப் பிரிவினருக்கும் ஊறு விளைவிக்கக்கூடாது என்பதில் உறுதியான நிலை எடுத்திருக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார். (ந.நி.)

;